Ajith - அஜித் ஒரு வேற்று கிரகவாசி.. ஏகேவை விளாசித் தள்ளிய தங்கர் பச்சான்.. அப்படி என்ன கோபம்

சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது.

கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். ஏகே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். துணிவு படம் எப்படி ஹிட் ஆனதோ அதேபோன்றொரு வெற்றியை கண்டிப்பாக விடாமுயற்சி திரைப்படமும் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அஜித்குமார்.

Director Thangar Bachan Slams actor Ajithkumar

போல்டு அஜித்: திரைத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர் அஜித். பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார், ரசிகர்களை சந்திக்கமாட்டார், பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளமாட்டார். இவை அனைத்துக்கும் பட தயாரிப்பு நிறுவனம் ஓகே சொன்னால்தான் படத்தில் நடிக்கவே ஒத்துக்கொள்வார். இதனாலேயே அஜித்துக்கான மவுசு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.

விமர்சனம்: அஜித்தை பொறுத்தவரை நடிப்பு என்பது தனது தொழில். அதை நான் செய்கிறேன் என்ற கோட்பாட்டில் இருப்பவர். ஆனால் அஜித் இப்படி நடந்துகொள்வது நியாயமல்ல. அந்தத் தொழிலின் மூலம் கோடிகளை ஈட்டுகிறார். அப்படி இருக்கையில் ரசிகர்களை சந்திப்பதிலோ இல்லை பட ப்ரோமோஷனில் கலந்துகொள்வதிலோ என்ன தவறு இருந்துவிடப்போகிறது என்பது ஒருதரப்பினர் நிலைப்பாடு. ஆனால் அஜித் அதையெல்லாம் காதில் போட்டிக்கொள்வதில்லை.

சாவுக்கும் வரமாட்டாரா?: முக்கியமாக அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டையும் வைப்பார்கள். அதாவது திரைத்துறையில் ஏற்படும் இறப்புகளுக்கு அவர் வருவதில்லை என்பதுதான் அது. சமீபத்தில்கூட விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். விஜய், சூர்யா, ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் எல்லாம் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். ஆனால் அஜித்தோ நேரிலும் வரவில்லை; இரங்கலும் தெரிவிக்கவில்லை. அப்போது அவர் துபாயில் இருந்ததால் வரமுடியாமல் போயிருக்கலாம்; இப்போது சென்னையில்தானே இருக்கிறார். எனவே விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்றிருக்கலாமே என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Director Thangar Bachan Slams actor Ajithkumar

தங்கர் பச்சான்: இந்நிலையில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அஜித் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் அஜித் பற்றி பேசுகையில், "இப்போது வருகிறவர்கள் பொறுக்கியாகவும், திருடர்களாகவும் வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கும் என்னதான் திருப்பி செய்தார்கள். நீங்கள் அஜித்திடம் சென்று தங்கர் பச்சானை பற்றி கேளுங்களேன். அவருக்கு தெரியாது. என்னை மட்டுமில்லை வேறு யாரையும் அவருக்கு தெரியவே தெரியாது. ஏனென்றால் அவர் வேறு ஒரு கிரத்தில் இருக்கிறார். வேறு ஒரு கோளில் வாழ்கிறார்.

தயாரிப்பாளர்களை அவர் சந்திக்கமாட்டார். பணம் கொடுத்து உடல் உழைப்பை கொடுத்து எத்தனை பேர் அவரது படத்தை வந்து பார்க்கிறார்கள். அந்த ரசிகர்களையும் அவர் பார்க்கிறது இல்லை. அவர் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அதை கொடுத்தது உழைக்கும் மக்கள்தான். ஆனால் அவர்கள் யாரும் அவருக்கு வேண்டாம். கோடி கோடியாக வாங்க மட்டும் வேண்டும். இதுதான் அவரது குறிக்கோள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X