சிம்பு மீது விமர்சனம் வர அதுதான் காரணம்.. இயக்குநர் தருண் கோபி ஓபன் டாக்
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்திலிருந்து ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் சிம்பு குறித்து இயக்குநர் தருண் கோபி பல விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் ட்ராப்?: படத்தின் அறிவிப்பு வெளியானதோடு அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை படத்தை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கும் படக்குழு எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்துவந்தது. அதனையும் கவனித்த ரசிகர்கள், அவ்ளோதான் எஸ்டிஆர் 48 முடிந்துவிட்டதுபோல என்று உறுதியாகவே சமூகவலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர். ஆனால் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் வெளியாகின.
தருண் கோபி பேட்டி: இதற்கிடையே சிம்பு மீது கடுமையான விமர்சனங்களும், ட்ரோல்களும் வருவது வழக்கமான ஒன்று. அதுகுறித்து சிம்புவை வைத்து காளை படத்தை இயக்கிய தருண் கோபி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "செக்க சிவந்த வானம் படத்தின் ஷூட்டிங்கின்போது சிம்பு எனக்கு ஃபோன் செய்தார். அப்போது, நான் ஊருக்கு போகிறேன். கதை ஏதாவது வைத்திருக்கிறாயா. நாம் அடுத்த படம் செய்வோம். டிஸ்கஷனுக்கு வேண்டுமென்றால் பணம் அனுப்புகிறேன் என்று சொன்னார்.
ஆண்டவன் அப்படி வைக்கவில்லை: அதற்கு நான் அந்தளவுக்கு ஆண்டவன் என்னை விடவில்லை என்று சொன்னேன். சிம்பு மீது தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு காரணம் என்னவென்றால், ஐந்து வயது குழந்தை 50 வயது பக்குவத்துடன் பேசினால் பல பேருக்கு எரிச்சல்தான் வரும். சிலர் அதை ரசிப்பார்கள். ஷூட்டிங்கில் ஏதேனும் தவறு நடந்தால் தனியாக கூப்பிட்டு முகத்துக்கு நேராகவே சொல்லிவிடுவார். அப்போது தங்களை அதிமேதாவியாக நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு சம்பட்டி அடியாக இருக்கும். அவர்கள்தான் சிம்புவை பற்றி தவறாக பேசுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











