அந்த விஜய் பட இயக்குநர் என்றால் அஜித் கதைக்கூட கேட்காமல் நடிப்பாராம்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அஜித் குறித்த புதிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார். இதுவரை மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படமும் கண்டிபாக நல்ல வரவேற்பு பெறும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Director Vikraman Open Talks about Ajith Here are the details

நோ அப்டேட்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 300 நாட்களை கடந்தும் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. வலிமை படத்தின அப்டேட்டுக்கு எப்படி ஏகே ரசிகர்கள் காத்திருந்தார்களோ அதைவிட அதிகமாகவே காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. மாறாக அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஓவர்: அங்கு தொடங்கிய ஷூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை வந்த படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருந்தபோது அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தற்போது பைக் டூர் கிளம்பியிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர்.

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி: இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங்கே முடியாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவின. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும்; நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. அதன்படி இருவரும் இணையும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

விக்ரமன் பேட்டி: இதற்கிடையே அஜித் இப்போது முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்தாலும்; அவருடைய ஆரம்பகாலத்தில் பல வித்தியாசமான முயற்சிகளை அஞ்சாமல் செய்து பார்த்தவர். அதில் ஒன்றுதான் கெஸ்ட் ரோல். நீ வருவாய் என, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் இயக்குநர் விக்ரமன் அஜித் குறித்து பேசியிருக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் கதையை சொல்லும்போது இதில் நீங்கள் கெஸ்ட் ரோல்தான் என்று ஆரம்பத்திலேயே அஜித்திடம் சொல்லிவிட்டேன். அதற்கு அவரோ, சார் உங்கள எனக்கு ரொம்பவே பிடிக்கும். உங்கள் படம் என்றால் கதைக்கூட கேட்காமல் நடிப்பேன். வில்லனாக இருந்தாலும் சரி; எந்த ரோலாக இருந்தாலும் சரி நான் நடிப்பேன் என்று சொல்லி அந்தப் படத்தில் நடித்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X