திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து.. வயது 47.. நடிகருக்கு ஜோராக நடந்த இரண்டாவது திருமணம்
சென்னை: தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழியில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் விஷ்ணுவர்தன். இவர் தமிழில் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரது சகோதரர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கிறார். அலிபாபா என்ற படத்தில் ஹீரோவாக நடித்த அவர் தொடர்ந்து கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்தார். முதலில் ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டில் ஃபேமஸ் இயக்குநராக வலம் வருபவர் விஷ்ணுவர்தன். அஜித்தை வைத்து பில்லா படத்தை படு ஸ்டைலிஷாக இயக்கி தனி கவனம் ஈர்த்தார். மேலும் அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் என தொடர்ந்து தமிழில் இயக்கிய அவர் ஹிந்தியிலும் இயக்கத்தில் கலக்கியவர். கடைசியாக அவர் நேசிப்பாயா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது.
விஷ்ணுவின் சகோதரர்: அவருக்கு கிருஷ்ணா என்ற சகோதரர் இருக்கிறார். அவரும் கோலிவுட்டில் ஃபேமஸான நடிகர்தான். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப்பயணத்தை ஆரம்பித்த அவர் தொடர்ந்து இருவர், டெரரிஸ்ட் போன்ற படங்களில் நடித்தார். வளர்ந்த பிறகு விஜய் நடித்த உதயா திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.

ஹீரோ கிருஷ்ணா: அதன்படி அலிபாபா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அவர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து கற்றது களவு என்ற படத்தில் நடித்த அவருக்கு கழுகு திரைப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதில் அவரது நடிப்பும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக கண்டிப்பாக பெரிய நடிகராக வலம் வருவார் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டது.
வரிசையாக படங்கள்தான்; ஆனாலும்: அதன்படி அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. யட்சன், வல்லினம், யாமிருக்க பயமே, யாக்கை, பண்டிகை, விழித்திரு, நிபுணன், வீரா, களறி என வரிசையாக ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதனையடுத்து கேரக்டர் ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் தனுஷுடன் மாரி 2 படத்தில் நடித்தார். பிறகு கழுகு 2விலும் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவையும் பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை.
முதல் திருமணம்: இதற்கிடையே அவர் 2014ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் இரண்டு பேரும் பிரிந்தார்கள். ஹேமலதா தன்னை சந்தேகப்பட்டு நடிக்கவிடாமல் டார்ச்சர் செய்கிறார் என்று கிருஷ்ணா கூறினார். அவர்களுக்கு 2016ஆம் ஆண்டு டைவர்ஸ் கிடைத்தது. அதனையடுத்து சிங்கிளாக இருந்து தனது கரியரில் கவனம் செலுத்திவந்தார்.
இரண்டாவது திருமணம்: இந்நிலையில் கிருஷ்ணாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது. 47 வயதாகும் அவர் இரண்டாவது முறையாக காதலிக்கிறார் என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தன்னுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதேசமயம் மணப்பெண் யார் என்பதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. கிருஷ்ணாவின் இரண்டாவது திருமணத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











