கார்த்தியிடம் கால்ஷீட் வாங்கிறதுகுள்ள கண்ணை கெட்டுதே: இயக்குனர்கள் புலம்பல்
சென்னை: தம்பி கார்த்திக்கு கதையை கேட்டு முடிவு செய்வது அவரது அண்ணன் சூர்யாவாம். கார்த்தியிடம் கால்ஷீட் வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கதை சொல்ல வேண்டி இருக்கு என்று இயக்குனர்கள் அலுத்துக் கொள்கிறார்களாம்.
நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள். அண்ணன், தம்பி இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது சிவகுமார் வீட்டில் தான்.
சூர்யா பெரிய நடிகராகிவிட்டார். அவரது தம்பி வேகமாக வளர்ந்து வருகிறார். ஆனால் அவர் நடித்த சகுனி, அலெக்ஸ் பாண்டியன் ஊத்திக் கொண்டதால் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் கார்த்தி.

வீடியோவில் கதை கேட்ட கார்த்தி
முன்பு கார்த்திக்காக ஒரு குழு கதை கேட்டு முடிவு செய்யும். அந்த குழு தேர்வு செய்யும் கதையை கார்த்தி கேட்பார். இயக்குனரை கேமராவில் கதை சொல்ல வைத்து அதை வீடியோவில் போட்டு பார்த்து கதையை தேர்வு செய்வார் கார்த்தி.

கதையை முடிவு செய்யும் சூர்யா
தற்போது கார்த்திக்காக சூர்யா தான் கதையை முடிவு செய்கிறாராம். ஏற்கனவே உள்ள குழு கதையை கேட்டு, சூர்யா கேட்டு அதன் பிறகே கார்த்தி கேட்கிறார். அதுவும் தனக்கு பிடித்தால் மட்டும் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

கார்த்தியிடம் கால்ஷீட் வாங்குவது இவ்வளவு கஷ்டமா?
கார்த்தியிடம் கால்ஷீட் வாங்க வேண்டும் என்றால் எத்தனை தடைகளை தாண்டிச் செல்ல வேண்டி இருக்கிறது என்று இயக்குனர்கள் அலுத்துக் கொள்கின்றார்களாம்.


Click it and Unblock the Notifications











