தீபாவளிக்கு வெளியாகும் அரசன்?.. போட்டிக்கு வரும் தனுஷ்?.. எஸ்டிஆர் சமாளிப்பாரா?

சென்னை: வெற்றிமாறன் இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் பெரும் தாக்கத்தை சினிமா துறையினரிடமும், ரசிகர்களிடமும் விதைத்திருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கிவருகிறார். படமானது தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது.

தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அதுவும் ஒரு கமர்ஷியல் டச்சில் உருவாகியிருந்தாலும்; ஆர்ட் ஃபிலிமாகவும் ஜொலித்தது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்து அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் விவாதத்தை கிளப்பின என்பது குறிபிடத்தக்கது.

Diwali Box Office Battle STR s Arasan vs Dhanush s D55 vs Sardar 2
Photo Credit:

வெற்றிமாறன் சந்தித்த விமர்சனம்: வெற்றிமாறனின் படங்கள் பெரும்பாலும் விமர்சனத்தை சந்திக்காது. ஆனால் வடசென்னை படம் அதற்கு விதி விலக்காக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோருக்கு அந்தப் படம் பிடித்திருந்தாலும் ஒருதரப்பினரோ; வடசென்னை மக்களை வெற்றிமாறன் மோசமாக சித்தரித்துவிட்டார் என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. விரைவில் அதன் இரண்டாவது பாகத்துக்கான பணிகள் தொடங்குகின்றன. வேல்ஸ் நிறுவனம் பட்த்தை தயாரிக்கிறது.

Also Read
ஒரு விபத்து.. ஜனகராஜின் வாழ்க்கையையே இப்படி மாற்றிவிட்டதே?.. சிரிப்புக்கு பின் இருக்கும் வலி தெரியுமா?
ஒரு விபத்து.. ஜனகராஜின் வாழ்க்கையையே இப்படி மாற்றிவிட்டதே?.. சிரிப்புக்கு பின் இருக்கும் வலி தெரியுமா?

சிம்புவுடன் படம்: கடைசியாக அவர் விடுதலை 2 படத்தை இயக்கினார். இப்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரை ஏற்றிருக்கிறார். வேல்ஸ் நிறுவனத்துடன் சிம்புவுக்கு ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இடையே இந்தப் படத்தின் ஷூட்டிங் தடைபட்டிருந்தது. இப்போது அனைத்தும் முடிந்து படத்தின் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. சிம்பு, விஜய் சேதுபதி காம்பினேஷன் காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக வந்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

எப்போது ரிலீஸ்?: படத்தை கலைப்புலி தாணு தயாரித்துவருகிறார். கண்டிப்பாக இந்த வருட தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அவர் இருக்கிறாராம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அரசன் படத்துக்கு போட்டியாக தீபாவளி அன்று தனுஷின் D 55, கார்த்தியின் சர்தார் 2 ஆகிய இரண்டு படங்களையும் களமிறக்க அந்தந்த தயாரிப்பாளர்கள் பிளான் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு Vs தனுஷ்: ஏற்கனவே திரைத்துறையில் ரஜினி - கமல், அஜித் - விஜய்க்கு பிறகு சிம்பு - தனுஷ் என்ற போட்டிதான் இருக்கிறது. இரண்டு பேரின் படங்களும் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம்தான். கடந்த சில வருடங்களாக அது நின்றிருந்தது. இப்போது வெளியாகியிருக்கும் தகவலை வைத்து பார்க்கையில் மீண்டும் அந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதில் யாருடைய படம் அதிகம் வசூலை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X