தீபாவளி ரேஸ் எல்லாமே டல்லா இருக்கே.. முதல் இடத்தில் யாரு தெரியுமா?.. கடைசி இடத்தில் இவரா?
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வராமல் இளம் நடிகர்களிடையே மோதல் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் ஆரம்பத்தில் தீபாவளிக்கு தங்கள் படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். ஆனால், இப்போதெல்லாம் அவர்கள் படங்கள் வெளியாகும் நாள் தான் தியேட்டர்களில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் மற்றும் நட்டி நட்ராஜின் கம்பி கட்ன கதை என மொத்தம் 4 படங்கள் வெளியாகின்றன. இதில், பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் குதித்துள்ள 3 இளம் நடிகர்களில் யாரு இப்போதைக்கு அட்வான்ஸ் புக்கிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளனர் என்பது குறித்த தகவலை இங்கே காணலாம் வாங்க..

டல்லடிக்கும் தீபாவளி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிகர் அஜித் குமார் படங்கள் இதே தீபாவளிக்கு வெளியாகி இருந்தால் இந்நேரம் டிக்கெட் கிடைக்கவில்லையே என்கிற நிலை உருவாகியிருக்கும். ஆனால், இளம் நடிகர்களின் படங்கள் போட்டிப் போடும் நிலையில், பெரிதாக யாருமே தியேட்டருக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. முதல் நாளே 50 கோடி, 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் என்றெல்லாம் இல்லாமல் 1 கோடி வசூல் செய்யவே அட்வான்ஸ் புக்கிங்கில் இளம் நடிகர்கள் அல்லாடி கொண்டிருக்கின்றனர்.
முதலிடத்தில் டியூட்: பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் தான் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 737 காட்சிகளை ஆக்கிரமித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் அந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள டியூட் திரைப்படம் இதுவரை 1.12 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் புக்கிங் மூலம் வருமானம் ஈட்டியுள்ளதாக சினி டிராக் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்து பைசன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், அமீர், ரஜிஷா விஜயன் மற்றும் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பைசன் திரைப்படம் அதிகபட்சமாக 433 காட்சிகள் திரையிடப்படவுள்ள நிலையில், இதுவரை 44 லட்சம் ரூபாய்க்கு ப்ரீ சேல் ஆகியுள்ளது.
கடைசி இடத்தில் டீசல்: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படம் 145 ஷோக்கள் மட்டுமே திரையிடப்படும் நிலையில், வெறும் 8.2 லட்சம் மட்டுமே ப்ரீ சேல் ஆகியிருப்பதாக கூறுகின்றனர். நாளை தீபாவளியை முன்னிட்டு இந்த 3 படங்களும் வெளியாகவுள்ள நிலையில், எந்த படம் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











