நடிகர் ஆர்யாவின் அறியப்படாத மறுபக்கத்தை பார்த்திருக்கிறீர்களா?
சென்னை: நடிகர் ஆர்யா ஒரு தொழில் அதிபர் என்பது உங்களுக்கு தெரியுமா?
நடிகர் ஆர்யா படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார். அவர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் ஜாலியாக பேசிப் பழகுவார். நடிகைகளை கலாய்ப்பதில் மன்னன். இது தான் நீங்கள் அறிந்த ஆர்யா.
உங்களுக்கு தெரியாத விஷயமும் ஆர்யாவை பற்றி உள்ளது. அது என்ன என்று பார்ப்போம்.

வாடகை
ஆர்யா தனது நண்பரும், ஒளிப்பதிவாளருமான நீரவ் ஷாவுடன் சேர்ந்து சினிமா எடுக்கத் தேவையான தொழில்நுட்ப கருவிகளை வாடகைக்கு விடுகிறார்.

ஹோட்டல்
சென்னை கிரீம்ஸ் சாலை மற்றும் அண்ணா நகரில் இரண்டு அசைவ உணவகங்களை நடத்தி வருகிறார் ஆர்யா.

தயாரிப்பு
நடிப்பதை தவிர அவர் படங்களை தயாரித்தும் வருகிறார். தனது தம்பி சத்யா நடித்துள்ள அமரகாவியம் படத்தை தயாரித்துள்ளார்.

தொழில் அதிபர்
நடிக்க வராவிட்டால் நான் நிச்சயம் தொழில் அதிபராக மட்டுமே இருந்திருப்பேன். ஏராளமானோருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அது தற்போது தான் நடக்கிறது என்றார் ஆர்யா.


Click it and Unblock the Notifications











