Actor Arjun net worth: தலைசுற்ற வைக்கும் அர்ஜூனின் சொத்து..கார் மட்டும் எத்தனை தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதபாத்திரத்திரங்களிலும் நடித்து வருபவர் நடிகர் அர்ஜூன்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Do you know Action king arjun sarja Net worth

இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் அர்ஜூனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாமா?

நடிகர் அர்ஜூன்: கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகனான அர்ஜுன் 1981ம் ஆண்டு வெளியான 'சிம்மதா மரி சைன்யா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். பின் 1984-ல் ராமநாராயணன் இயக்கிய நன்றி என்னும் திரைப்படத்தின் இரண்டு நாயகர்களில் ஒருவராக தமிழ் திரைத் துறையில் முதல் தடம் பதித்தார். அதன்பின் தமிழ், கன்னடம் என மாறி மாறி நடித்தார். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குநர், கதை திரைக்கதை ஆசிரியராகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

தேசப்பற்று மிகுதி: சுதந்திர தினத்தில் பிறந்ததால் இவரது படங்களில் தேசப்பற்று மிகுதியாக இருக்கும். தேசப்பற்றை முன்னிறுத்திய படங்களிலும், தேசப்பற்றை மையமாகக் கொண்ட பல காவல்துறைப் படங்களிலும் நடித்துள்ளார். அர்ஜூன் இயக்கிய ஜெய்ஹிந்த் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மறக்கமுடியாத படம்: இயக்குநர் ஷங்கர் அறிமுகமான ஜெண்டில்மேன் படத்தின் நாயகனாக நடித்தார் அர்ஜூன். இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்து அர்ஜூனின் சினிமாவில் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒருபடமாக மாறியது. அதிரடியான நடிகராக கலக்கிவந்த அர்ஜூன், அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதிரடி வில்லன்: அதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். விஷால் திரைப்படமான இரும்புத்திரை திரைப்படத்திலும் இவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்திலும் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜூன்.

Do you know Action king arjun sarja Net worth

சொத்து மதிப்பு: சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் அர்ஜூனுக்கு ரூ.80 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜூன் படத்திற்கு லட்சத்தில் சம்பளம் வாங்கி இருந்த நிலையில், லியோ படத்தில் அவருக்கு 5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவரிடம் சொந்தமாக பிஎம்டபியூ ஐ8, ஆடி கார் என பல ரக கார்களை வைத்து இருக்கிறார்.

தீவிர ஆஞ்சநேயர் பக்தரான இவர் சென்னை கிருகம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கோவில் ஒன்றையும் கட்டி உள்ளார். இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் அர்ஜூனுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X