விவசாய பண்ணை.. ஐடி கம்பெனி.. அமெரிக்காவில் ராஜபோக வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு!

சென்னை: அரசியல் சினிமா என மாஸ் காட்டிவந்த நடிகர் நெப்போலியனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ரசிகர்களும், நண்பர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருச்சியை பூர்வீகமாக கொண்ட நெப்போலியன் 1963ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், சினிமா மீதும் நடிப்பு மீதும் இருந்த ஆர்வத்தால், சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தார்.

Do you know actor and politician napoleon property value

புது நெல்லு புது நாத்து: நெப்போலியனின் ஆசைக்கு விதைபோட்டபாரதிராஜா புது நெல்லு புது நாத்து படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று நெப்போலியனுக்கு சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்தது. நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நெப்போலியன், சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.

அசுர வளர்ச்சி: சினிமா குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நெப்போலியன் 2001ம் வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து பெரம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆகவும் பதவி வகித்த நெப்போலியன், திடீரென சினிமா, அரசியல் இரண்டிலிருந்தும் விலகி அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

Do you know actor and politician napoleon property value

அமெரிக்காவில் விவசாய பண்ணை: அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை அளர்ச்சி நோய் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரின் சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் அவருக்கு கோடி கோடியாய் வருமானம் வருகிறது. மேலும், அமெரிக்காவில் 3 ஆயிரம் ஏக்கருக்கு விவசாய பண்ணை ஒன்றையும் வைத்திருக்கிறார்.

சொத்து மதிப்பு: தசை அளர்ச்சி நோய்யால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது மூத்த மகனுக்காக லிப்ட் வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான வீடு, இளைய மகனுக்காக கூடைப்பந்து மைதானம், நீச்சல் குளம், பிரம்மாண்ட சமையல் அறை என வீட்டை பார்த்து பார்த்து கட்டிஉள்ளார். மேலும், டெஸ்லா, பென்ஸ், டொயோட்டா நான்கு சொகுசு கார்களை வைத்து இருக்கும் நடிகர் நெப்போலியினின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X