சொந்தமாக ஓட்டல் பிஸ்னஸ்.. பல சொகுசு கார்.. ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து அவன் இவன், நான் கடவுள், மதராசபட்டிணம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த ஆர்யா இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

அவருக்கு ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு உள்ளது என்று பார்க்கலாம்.
காதல் திருமணம்: நடிகர் ஆர்யா, சாயிஷாவுடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கக் தொடங்கினர். இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அர்யானா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்த சாயிஷா, அண்மையில் வெளியான பத்து தல படத்தில் வரும் ஐட்டம் பாடலான ராவடி பாடலுக்கு இறங்கி ஆட்டம் போட்டிருந்தார்.
சைந்தவ்: நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு வெளியான அரண்மனை3, எனிமி, காதர் பாட்ஷா போன்ற எந்த படங்களும் வெற்றிப் பெறவில்லை தற்போது ஆர்யா, சைந்தவ் என்ற படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கிய சைலேஷ் கொல்லன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
43வது பிறந்த நாள்: நடிகர் ஆர்யா இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரின் மொத்த சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா படத்திற்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரின் மாத வருமானம் மட்டும் 2 கோடி என்றும், ஆண்டு வருமானம் 16 கோடி என்றும் கூறப்படுகிறது.
மொத்த சொத்து மதிப்பு: ஆர்யா நடிப்பது மட்டுமின்றி ஹோட்டல் தொழிலையும் கவனித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக Sea Shell, Zaitoon ஆகிய ஹோட்டல்கள் உள்ளன. அரேபியன் டிஷ்கள் ஸ்பெஷலான அந்த ஹோட்டல்களை கடந்த 45 வருடங்களாக ஆர்யா குடும்பம் நடத்தி வருகின்றனர். மேலும், இவர், பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். 1 கோடி ருபாய் மதிப்பு Audi Q7 காரும், 70 லட்சம் ரூபாய் மதிப்பு Benz E Class கார் வைத்து இருக்கும் ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











