மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிம்பிள் தான்..ஆனால், சொத்து மட்டும் பல கோடி!

சென்னை: தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்து விடுவது இவரது தனி ஸ்டைல்.

Do you know actor vijay sethupathi net worth and salary

கதாநாயகனாக கலக்கி வந்த விஜய்சேதுபதி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் அசத்தலான வில்லனாக வந்து அதிர வைத்தார். அந்த படத்தில் அவர் நடித்த பவானி என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன்பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல், பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற வில்லன் ரோலில் பட்டையை கிளப்பி இருந்தார்.

நடிகர் விஜய்சேதுபதி: கோலிவுட்டில் கடின உழைப்பிற்கு பெயர் போன நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான சூது கவ்வும், கருப்பன், பீட்சா, சேதுபதி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இதில் விக்ரம் வேதா திரைப்படம் விஜய்சேதுபதிக்கு மாஸ் நடிகர் என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது. விஜய்சேதுபதி வந்தாலே போதும் என நினைக்கும் பல தயாரிப்பாளர்கள் அவரை கேமியோ ரோலில் நடிக்க வைத்து வசூலை அள்ளி வருகின்றனர்.

பாலிவுட்டிலும் மாஸ்: பாலிவுட் வரை சென்றுள்ள விஜய்சேதுபதி ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்துள்ளார். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. தற்போது இவர் கத்ரினா கைபுடன் ஜோடி போட்டு மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா, காந்தி டாக்ஸ், விடுதலை பாகம் 2 படங்கள் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. விடுதலை படத்திற்கு பிறகு வெற்றிமாறனுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார், ஆனால் அந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவில்லை, பொன்ராம் இயக்குகிறார்.

சொத்து மதிப்பு: இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வரும் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் படங்களில் நடிப்பதற்கு 10 முதல் 15 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும், ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடிக்க 21 கோடி ருபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. பல விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் இவரின் சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 140 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X