தலையே சுத்துது.. பல ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் சல்மான் கான்.. ஆனால், இப்படி தான் வாழ்கிறாரா!

மும்பை: பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான் கான் தனது 58வது பிறந்தநாளை, அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு இணையத்தின் வழியாக ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து வருபவர் சல்மான் கான். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் பிக் பாஸை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதைப் போன்று, இந்தியில் பிக்பாஸை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். 58 வயதாகும் சல்மான் கான்1988ம் ஆண்டு மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமானார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட்டில் கலக்கி வரும் சல்மான் இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.

Do you know bollywood star salman khan net worth and salary

Hum Dil De Chuke Sanam திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். ஆனால், ஐஸ்வர்யா தந்தைக்கும் சல்மான் கானுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர். அப்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஐஸ்வர்யா ராய் சல்மானின் குடிப்பழக்கம் குறித்து அவரின் துரோகம் பற்றி மனம் திறந்து பேசி இருந்தார். அதே போல கத்ரீனா கைஃப்பையும் சல்மான் காதலித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு யுவராஜ் படப்பிடிப்பின் போது சல்மான் கத்ரீனாவை அறைந்ததாகச் செய்திகள் வந்தன. சமீபத்தில் கூட சோனாக்ஷி சின்ஹாவுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் பின்னர் பிரிந்துவிட்டதாகவும் கூட செய்தி பரவியது.

Do you know bollywood star salman khan net worth and salary

டைகர் 3: பாலிவுட் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் சல்மான் கானின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டைகர் 3 திரைப்படம், தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டிய இத்திரைப்படத்தை மணீஷ் ஷர்மா இயக்கி இருந்தார். டைகர் 3, ஸ்பை த்ரில்லர் ஜானரில் ஆக்‌ஷன் ட்ரீட்டாக உருவாகி உள்ள இப்படத்தில், சல்மான் கானுடன் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி நடித்துள்ளனர். முக்கியமாக ஷாருக்கானும் ஹிருத்திக் ரோஷனும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஷாருக்கானின் பதான் படத்தில் சல்மான் கான் கேமியோவாக நடித்திருந்தார். அதேபோல் இப்போது ஷாருக்கானும் சல்மான் கானுக்காக நடித்துள்ளார்.

Do you know bollywood star salman khan net worth and salary

மொத்த சொத்து மதிப்பு: இன்று 58வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 2255 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. சல்மான் கான் ஒரு படத்திற்கு 70 கோடி முதல் 75 கோடி வரை சம்பளமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிராண்ட் அம்பாஸ்டராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அதிகளவில் சம்பாதித்து வருகிறார்.. மும்பையில் சுமார் ரூ. 114 கோடியில் மார்க்கெட் வால்யூ வீடு ஒன்றை வைத்து இருக்கும் சல்மான் கான். ரால்ஸ் ராய்ஸ், Mercedes - Benz GL Class, Range Rover, Lexus, BMW X6, AudiRS7, Toyota Land Cruiser போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்து இருக்கிறார்.

கோடி கோடியாக சொத்து வைத்து இருந்தாலும் சல்மான் பெரும்பாலும் பண்ணை வீட்டிலும், ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய வீட்டிலும் இருப்பதையே அதிகம் விரும்புவாராம். அந்த வீட்டில் ஒரு சின்ன சோபா, டைனிங் டேபிள், வருபவர்களை சந்திக்க ஒரு சின்ன இடம், ஒரு அறையில் ஜிம் மற்றும் ஒரு ரூம் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X