Kamal: கமலஹாசனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தெரியுமா? நாலா பக்கத்திலும் இருந்து கொட்டும் பணமழை!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அவர் சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

பரமகுடியில் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி ஸ்ரீநிவாசன் ராஜலெட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் கமலஹாசன்.

do you know Kamal Hasaans net worth and salary

இவருடைய உடன் பிறந்த சகோதரர் சாருஹாசன். திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கமலஹாசனின் சகோதரி நளினி. கிளாசிக் டான்சர் ஆவார்.

உலகநாயகன் கமல்ஹாசன்: கலை குடும்பத்தை சேர்ந்த கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தங்கப்பன் என்ற நடன இயக்குநரிடம் உதவி நடனகலைஞராக பணியாற்றிய கமல், உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். இவர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராக மாறினார்.

ஏராளமான விருது: அதன் பின்னர் பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த கமல். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடகர், கதாசிரியர் என சினிமாத்துறையில் முத்திரை பதித்தார். மாஸ் வெற்றிப்படங்களை கொடுத்த கமல்ஹாசன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது, பிரான்ஸ் நாட்டு விருது,19 பிலிம்பேர் விருது, 4 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

do you know Kamal Hasaans net worth and salary

ராஜ் கமல் இன்டர்நேஷனல்: தங்கத்திற்கு என்றுமே மவுசு குறையாது என்பது போல, பல ஆண்டுகளாக சினிமாவில் கொடி கட்டி வரும் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 230க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. இந்த மகத்தான வெற்றியைத் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் பெயரில் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார்.

பல கோடி சொத்து: சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலே முதலீடு செய்யும் கமலின் சொத்து மதிப்பு 388 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு சென்னையில் 7 சொத்துகளும், பெங்களூரில் 2 சொத்துக்களும், மங்களூரு, கர்நாடகா, கோவா, மும்பை, லண்டன் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீடு அவரது பரம்பரை சொத்தாகும். இந்த வீட்டை கமல், 60 ஆண்டுகாலமாக பராமரித்து வருகிறார்.

do you know Kamal Hasaans net worth and salary

பிக் பாஸ் சம்பளம்: நடிப்பு மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு சம்பளமாக ரூ.130 கோடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இவருக்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளார். இவருக்கு பின் வந்த நடிகர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்து இருக்கும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறைவுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X