Ajith Net Worth: நடிகரா இல்லை ரேஸரா? அஜித்தின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அஜித்குமாரின் மொத்த சொத்து மதிப்பை பார்க்கலாம்.
நடிகர் அஜித்குமார்: கோடான கோடா மக்கள் மனதில் இடம் கொண்டு இருக்கும் நடிகர் அஜித் குமார், திரையுலகிற்கு வருவதற்கு முன் பைக் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணத்திற்காக மெக்கானிக்காகவும், ஆடை விற்பனையாளராகவும் இருந்தார். பின் சினிமாவிற்கு வந்த போதும் அந்த கனவை அடைவதற்கான கடுமையாக முயற்சி செய்து அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து இன்று டாப் நடிகர்களில் ஒருவராக மாறிய பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு உலக அரங்கில் அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

சொத்து மதிப்பு: இந்நிலையில் அஜித் குமார் இன்று தனது 55வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நாளில் அஜித்தின் சொத்து மதிப்பை பார்க்கலாம் அஜித் குமார் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 105 கோடி முதல் ரூ. 165 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சென்னை திருவான்மியூரில் ஒரு ஆடம்பரமான வீட்டில் பங்களாவில் மனைவி ஷாலினி மற்றும் இரு குழந்தைகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 12 கோடி முதல் 15 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையோர அமைந்துள்ள இந்த பங்களாவில் நீச்சல் குளம்,உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைந்துள்ளன.
சொகுசு கார், பைக்: கார் , பைக் பிரியரான அஜித், ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW S1000 RR, Aprilia Caponord மற்றும் BMW K1300 S உள்ளிட்ட உயர்தர பைக்குகளை வைத்து இருக்கிறார். இதே போல ரூ. 34 கோடி மதிப்புள்ள Lamborghini மற்றும் BMW 7 Series காரை வைத்து இருக்கிறார். இவை மட்டுமில்லாமல் தனியாக ஜெட் விமானம் ஒன்றும் உள்ளது இதன் மதிப்பு ரூ.25 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி அஜித் குமார் மொத்த சொத்து மதிப்பு ரூ.350 கோடியில் இருந்து ரூ.380 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
காதல் திருமணம்: அஜித் குமார், 'அமர்க்களம்' படத்தில் ஷாலினியுடன் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் 2000 ஆம் ஆண்டுதிருமணம் செய்துகொண்டனர். அஜித் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், ஷாலினி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்த போதும் இருமுறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications