D55 பட பூஜை.. தனுஷ் கையில் இருக்கும் வாட்சின் விலை என்ன தெரியுமா?
சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் டி55 படத்தின் பூஜை சென்னையில் மிகவும் தடபுடலாக நடந்தது. அந்த புகைப்படங்களை வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வெள்ளை வேட்டி சட்டையில் மிகவும் எளிமையாக இருந்த தனுஷ் கையில் கட்டி இருந்த வாட்சின் விலை என்ன என்று தெரியுமா?
அமரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி தனுஷூடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு டி55 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளார்.மேலும், இப்படத்தில் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். டி55 படத்தை ஆர்.டேக் ஸ்டுடியோஸுடன் சேர்ந்து, வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் தனுஷ்.

D55 பட பூஜை: இந்த படத்தின் பூஜை வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடந்தது. இதில், தனுஷ் வழக்கம் போல மிகவும் எளிமையாக வேட்டி, சட்டையில், கருங்காலி மாலை அணிந்து வந்திருந்தார். இந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில், தனுஷ் கட்டி இருந்த வாட்சின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாட்ச் 'படேக் பிலிப் க்யூபிட்ஸ்' ரக வாட்ச். இதில், 18 கேரட் ரோஸ் கோல்டு, ஸ்கிராட்சஸ் வராத அளவுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை பயன்படுத்தி இந்த வாட்சை தயார் செய்து இருக்கிறார்கள். 45 மில்மி மீட்டர் டயல் கொண்ட ஒரு ஆட்டோமேட்டிக் பவர் வாட்ச் இது. தனுஷ் வைத்து இருக்கும் பல விலை உயர்ந்த வாட்ச்களில் இது ஒரு யூனிக்கான வாட்ச். இந்த கை கடிகாரத்தின் தற்போதைய மார்க்கெட் விலை 90 லட்சம் ரூபாய்.
விலை உயர்ந்த வாட்ச்: 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சொகுசு ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஆகும். இது சதுரம், வட்டம் மற்றும் எண்கோண வடிவம் கலந்த வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஸ்டீல் மாடல், ஸ்டீல் மற்றும் ரோஸ் கோல்ட், பிளாட்டினம் மாடல்களில் கிடைக்கும். தனுஷ் கட்டி இருக்கும் இந்த வாட்ச் ஸ்டீல் மற்றும் ரோஸ் கோல்ட் வகையை சேர்ந்த வாட்ச் ஆகும்.


Click it and Unblock the Notifications











