கடன் பிரச்சனையில் GVM.. துருவ நட்சத்திரம் படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் வெளியாவதில் பல சிக்கல் இருக்கும் நிலையில் இப்படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

துருவநட்சத்திரம் படத்தில், ராதிகா சரத்குமார், ரித்துவர்மா, சிம்ரன், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

do you know vikram salary for dhruva natchathiram movie

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்டம், நவம்பர் 24 ந் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் துருவ நட்சத்திரம் ரிலீஸில் ஆகவில்லை. இதனால் ரசிகர் மிகுந்த வேதனை அடைந்தனர்.

துருவநட்சத்திரம்: 7 ஆண்டுக்கு மேலாக துருவ நட்சத்திரம் படம், பண பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை. இயக்குநர் கௌதம் மேனன், சிம்புவை ஹீரோவாக வைத்து சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்குவதற்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கி இருந்தார். ஆனால், சொன்ன நேரத்திற்கு படத்தை தரமுடியாமல் போனது.

கடன் பிரச்சனை: இதனால், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடைபெற்றதால், துருவநட்சத்திரம் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஆனால், சிலர் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதால், பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

படம் வெளியாவதில் சிக்கல்: கடந்த ஏழு ஆண்டுகளாக துருவநட்சத்திரம் படம் வெளியாகாமல் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த கடன் பிரச்சனையை சமாளிப்பதற்காகத்தான் கௌதம் மேனன் படத்தில் நடிப்பதற்கே வந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வைத்த மொத்த சொத்துக்களையும் அவர் இதில் முதலீடு செய்துள்ள நிலையில், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரமின் சம்பளம்: கௌதம் மேனன் இவ்வளவு பெரிய பணப்பிரச்சினையில் சிக்கி தவித்து வரும் நிலையில், நடிகர் விக்ரம் இந்த படம் வெளிவர எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிக்க விக்ரம் ரூ 15 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X