இப்போ அப்பாஸ் என்ன செய்றாரு தெரியுமா? மாதவனுக்கு டஃப் கொடுத்தவர் நீங்க.. இப்படி பண்ணலாமா?
சென்னை: 1996ஆம் ஆண்டு காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.
பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹேராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
குரு என் ஆளு ராமானுஜன் போன்ற படங்களில் கடைசியாக நடித்திருந்தார் அப்பாஸ், தற்போது அவரை பற்றிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றது.

சார்மிங் ஆக்டர்
காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் அப்பாஸ். கதிர் எழுதி, இயக்கிய இந்த படத்தில் வினித், தபு போன்ற பலரும் நடித்திருந்தனர். இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அபாசுக்கு இந்த படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அணைத்து கதாபாத்திரமும்
விஐபி, பூச்சூடவா, இது எல்லாம் சுகமே, சுயவரம், படையப்பா, மலபார் போலீஸ் என்று தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஹீரோவாக மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், போன்ற படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட் படமாகவே அமைந்தது.

முன்னணி நடிகைகள்
நடிகர் அப்பாஸ் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வந்தார்.மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் இவருக்கு கதாபாத்திரம் நல்ல புகழை பெற்று தந்தது. பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னலே படத்தில் மாதவனுடன் இவர் இணைந்து நடித்த உடன் மாதவனுக்கு டஃப் கொடுக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது .

தோசை சுடும் அப்பாஸ்
கமலஹாசன், ரஜினிகாந்த், விக்ரம் போன்ற பல முன்னாடி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் செட்டில் ஆகியதாகவும் கூறி வந்தனர். ஹீரோவாக மட்டும் இல்லாமல் பல கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் அபாஸுக்கு ரசிகர் பட்டாளமே இருந்தது. இப்போது அப்பாஸ் என்ன செய்கிறார் என்று பலர் கேள்விகள் எழுப்பிய நிலையில் , சமீபத்தில் நடிகர் அப்பாஸ் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். அதற்கு காரணம் அந்த வீடியோவில் அவர் தோசை சுட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் மாதவனுக்கு டஃப் கொடுத்த ஆள் சார் நீங்க.. இப்படி மாறிட்டீங்களே என்று கமெண்ட்கள் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











