காமெடி நடிகருக்கு இருந்த குடிப்பழக்கம்.. வாழ்க்கையே போச்சு.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சென்னை: வைகை புயல் வடிவேலுவுடன் நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா என்ற நகைச்சுவையின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகர் முத்துக்காளை. அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் பிஸியான இவர் தனக்கு இருந்த குடிப்பழக்கத்தில் அந்த வாய்ப்பை எல்லாம் நழுவவிட்டார். அதில் இருந்து மீண்ட முத்துக்காளை தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா?

ராஜபாளையத்தில் பிறந்த முத்துக்காளை, கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் முறைப்படி கராத்தே கற்றுக்கொண்டு பிளாக் பெல்ட் பெற்றார். இதனால், இவருக்கு சினிமாவில் சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசை வர, சென்னைக்கு வந்தார். பட வாய்ப்பை தேடி அலைந்த முத்துக்காளைக்கு ஒரு சில திரைப்படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

Vadivelu Muthukalai

வடிவேலுவுடன் இணைந்தார்: இதையடுத்து, 1997ம்ஆண்டு பொன்மனம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பிறகு என் உயிர் நீதானே, நிலவே முகம் காட்டு, போன்ற படங்களில் நடித்தார். இப்படி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது, நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நட்பு கிடைத்தது. அந்த நட்பின் மூலம், அவருடன் இணைந்து என் புருஷன் குழந்தை மாதிரி என்கிற படத்தில் நடித்தார். அதில், நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடலாமா என்ற காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து வடிவேலுவுடன் சேர்ந்து சீனா தானா 001, விந்தை, கபாலி தோட்டம் என பல படங்களில் நடித்தார்.

குடிப்பழக்கம்: ஆனால், அவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் அவரால் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால், எந்த படத்திலும் கமிட்டாகாமல் போனார். அது மட்டுமில்லாமல், வடிவேலுக்கு மார்க்கெட் குறைந்ததை தொடர்ந்த முத்துக்காளைக்கும் படவாய்ப்பு இல்லாமல் போனது. பெரிதாக படவாய்ப்பு இல்லாதால், இவரை திரைப்படங்களில் பார்க்கவே முடியவில்லை.

Vadivelu Muthukalai

3 டிகிரி: இதையடுத்து, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்ட முத்துக்காளை 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 2019ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேச்சி பெற்றார். அதன் பின் B.Lit தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். என்னை பலரும் குடிகாரன் என்று அழைத்தார்கள், அந்த பெயரை மாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து படித்து தற்போது மூன்று டிகிரி வாங்கி இருக்கிறேன். என்று முத்துக்காளை பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். முழுமையாக குடியில் இருந்து மீண்ட முத்துக்காளை தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மகிழ்ச்சி: அண்மையில் முத்துக்காளை, லண்டனில் முதல் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்த இளையராஜாவை நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் சந்தித்து வாழ்த்திய நிலையில், நடிகர் முத்துக்காளையும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்தினார். அந்த போட்டோவை இணையத்தில் பகிர்ந்த இவர், நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவர் இசையமைத்த பல படத்தில் நடித்துஇருக்கிறேன். ஆனால், இதுவரை போட்டோ எடுத்தது இல்லை. இது என் முதல் போட்டோ என பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Read more about: vadivelu வடிவேலு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X