கூலி: ‘மோனிகா ஐ லவ் யூ‘ என பூஜா ஹெக்டேவுடன் ஆட்டம் போட்ட அந்த நடிகர் யார் தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பான் இந்திய திரைப்படமான 'கூலி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, அமீர் கான், உப்சேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், மஹேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், முன்னோட்டங்கள், பாடல்கள் ஏற்கனவே பெரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி டிரெண்டான நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' பாடல் வீடியோவை நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த பாடலில், பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த பாடலில், பூஜா ஹெக்டேவுடன் நடனமாடிய அந்த நடிகர் யார் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக எழுந்துள்ளது. அவர் யார் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரஜினிகாந்தின் கூலி: கூலி படத்தில் இடம் பெற்ற "மோனிகா ஐ லவ் யூ" பாடல் வீடியோ நேற்று வெளியானது. இதில் பூஜா ஹெக்டே சிவப்பு நிற உடையில் அழகாக நடனமாடி இருந்தார். அவரது நடன அசைவுகள், உடல் மொழி மற்றும் பாடலில் அவர் வெளிப்படுத்திய பாவம் ஆகியவை சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. மோனிகா பாடல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள மாஸ் பீட் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக உள்ளது. விஷ்ணு எடவன் பாடல் வரியில், சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அசால் கோலார் ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர்.

யார் இந்த சௌபின் ஷாஹிர்: பூஜா ஹெக்டேவின் கவர்ச்சியுடன், அவருடன் நடனமாடிய நடிகர் யார் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. "மோனிகா கிக் கிக் மா.. ஐ லவ் யூ" பாடலில் பூஜாவுடன் சேர்ந்து நடனமாடிய அந்த நடிகருக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நடிகர் வேறு யாருமல்ல, மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் என்பது இணையத்தில் தேடிய பலருக்கு தெரியவந்துள்ளது. கேரளாவின் கொச்சியில் பிறந்த சௌபின் ஷாஹிர், 1992ஆம் ஆண்டு வியட்நாம் காலனி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
திறமையான நடிகர்: அதன் பிறகு பாடி காட், பிரேமம், சார்லி, ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், ப்ரோ டாடி, மஞ்சுமல் பாய்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், நடித்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தமிழில் பார்த்த பலரும் இவரது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். தற்போது,சௌபின் ஷாஹிர், கூலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்க உள்ளார். பூஜா ஹெக்டேவுடன் அவர் ஆடிய நடனம் அவருக்கு மேலும் ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை தியேட்டரில் பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.,


Click it and Unblock the Notifications











