Don't Miss!
- Finance
ஜூலை 26 கடைசி.. ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!
- Technology
ரூ.20,000க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!
- Automobiles
0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!
- News
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!
- Lifestyle
இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..
- Sports
சிஎஸ்கேக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கு பொருத்தமான ஜோடி இவர் தான்...நாகசைதன்யா யார் பெயரை சொல்லிருக்கார் பாருங்க
ஐதராபாத் : விவாகரத்தை அறிவிப்பதற்கு முன்பும், விவகரத்தை அறிவித்து நான்கு மாதங்கள் கடந்த பிறகும் தொடர்ந்து தற்போது வரை தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருபவர்கள் நாக சைதன்யாவும், சமந்தாவும். இவர்களின் விவாகரத்து விவகாரம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது.
விவாகரத்தை அறிவித்த பிறகும் சமந்தா பல சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவர் நடனமாடிய புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா பாடல் பற்றி அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகின்றன.
நாய்
சேகர்
பட
போஸ்
கொடுத்த
புஷ்பா
பட
ஹீரோயின்...
நன்றி
சொன்ன
ஹீரோ

நேருக்கு நேர் சந்தித்த ஜோடி
விவாகரத்தை அறிவித்த பிறகு சமீபத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இருவர் நடிக்கும் பட ஷுட்டிங்கும் நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள வந்தவர்கள், நேருக்கு நேர் பார்த்தும் ஏதும் பேசிக் கொள்ளாமல் தங்களின் கார்களில் ஏறி சென்றுள்ளனர்.

அவருக்கு ஓகேன்னா எனக்கு ஓகே
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நாக சைதன்யா முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசி உள்ளார். அதில், விவாகரத்தில் சமந்தாவிற்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம் தான் என கூறி இருந்தார். இதனால் நாக சைதன்யாவுக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லையா. சமந்தாவின் கட்டாயத்தால் தான் விவாகரத்து நடைபெற்றதா என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

விவாகரத்து தான் சரியா
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களின் நான்கு ஆண்டு கால மண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இருவரும் அறிவித்தனர். இந்நிலையில் தற்போது பங்காருராஜு படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் இருக்கும் நாக சைதன்யாவிடம் விவாகரத்து பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், இருவரின் சந்தோஷத்திற்கு இருவரும் இணைந்து எடுத்த முடிவு இது. அவருக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம். அந்த சூழலில் விவாகரத்து தான் சரியான முடிவு என்றார்.

இவர் தான் எனக்கான ஜோடி
தொடர்ந்து பேசிய அவரிடம், சினிமாவில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார் என நினைக்கிறீர்கள். யாருடன் உங்களுக்கு கெமிஸ்ட்ரி ஒத்து போவதாக கேட்கப்பட்டது. அதற்கு நாக சைதன்யா சொன்ன பெயரை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் சொன்னது வேறு யாருடைய பெயரையும் அல்ல. தனது முன்னாள் மனைவி சமந்தாவின் பெயரை தான்.

அட இதுவும் இவர் படம் தானா
அதே போல், எந்த படம் இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கும் சமந்தா நடித்த மஜ்லி படத்தை தான் கூறி உள்ளார் நாக சைதன்யா. மஜ்லி படத்தில் திவ்யன்ஷா கெளசிக்கிற்கு ஜோடியாக தான் சமந்தா நடித்திருந்தார். இந்த படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இவர்களுடன் நடிக்க ஆசை
பாலிவுட் நடிகைகளில் யாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என நாக சைதன்யாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் உடன் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். அவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடன் நடிக்க தான் ஆசை என்றார்.

தெலுங்கில் செம பிஸி
நாக சைதன்யா தற்போது தனது தந்தை நாகர்ஜுனாவுடன் இணைந்து பங்காருராஜு படத்தில் நடித்து வருகிறார். அதோடு அமிர் கானின் லால் சிங் செளத்தா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதே சமயம் சமந்தாவும், பைலிங்குவல் படமான யசோதா படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.