எல்லோரும் ரஜினி பின்தொடர்கிறார்கள்... அவர் யாரைப் பின்தொடர்கிறார் தெரியுமா?
ரஜினி ட்விட்டருக்குள் நுழைந்த அந்த நாளைய பரபரப்பு இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. மீடியா முழுக்க அவரது டிவிட்டர் கணக்கு பற்றித்தான் பேச்சாக இருந்தது.
முதல் நாளிலேயே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின் தொடர்ந்து, ட்விட்டர் வரலாற்றை அதிர வைத்தார் ரஜினி.

4 லட்சம்
கடந்த 8 நாட்களில் அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சத்தை நெருங்குகிறது. சினிமாவில் அவர் படத்துக்குக் கிடைக்குமே, அப்படியொரு அபார ஓபனிங் இது.

ட்வீட்கள்
இதுவரை ரஜினி 3 ட்வீட்கள்தான் செய்திருக்கிறார். மூன்றுமே நன்றியறிவிப்பு ட்வீட்கள்தான். இன்னும் ரெகுலராக அவர் ட்வீட் செய்ய ஆரம்பிக்கவில்லை. அப்படி அவர் ட்வீட் செய்ய ஆரம்பித்தால், ரசிகர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்தால், இந்த வாரமே கூட ஒரு மில்லியனைத் தாண்டும் அவரது பாலோயர்கள் எண்ணிக்கை.

யாரைப் பின் தொடர்கிறார்?
ட்விட்டரில் இவ்வளவு பேர் ரஜினியைப் பின் தொடர, அவர் யாரையெல்லாம் பின் தொடர்கிறார்? அவர் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது... அவர் பின்தொடர்வது நாட்டின் முக்கியமான மீடியா நிறுவனப் பக்கங்களைத்தான். அதைத்தான் அவரது ட்விட்டர் பக்கம் பிரதிபலிக்கிறது.

செய்தி இணையங்கள்
ஆன்லைனில் செய்திகளை வழங்கும் பத்திரிகை நிறுவனங்களான, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆல் இந்தியா ரேடியோ, டைம்ஸ் ஆப் இந்தியா, பிபிசி, டிஎன்ஏ, தி இந்து, லைவ் மின்ட், எகனாமிக் டைம்ஸ், ஆஜ் தக், இந்துஸ்தான் டைம்ஸ், ஜீ நியூஸ், இந்தியா டுடே, என்டிடிவி, சிஎன்என் - ஐபிஎன், டைம்ஸ் நவ், பர்ஸ்ட் போஸ், ஏபிபி, பிஸினெஸ் ஸ்டான்டர்டு ஆகியவற்றைத்தான் ரஜினி பின் தொடர்கிறார்.

முக்கியத்துவம்
பொதுவாக ரஜினியை மீடியாவை விட்டு ஒதுங்கி நிற்பவர் என்று வர்ணிப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்தான் மீடியாவை அதிகம் கவனிப்பவர் என்றால் மிகையல்ல. தினசரி முக்கிய செய்தித்தாள்கள் அனைத்தையும் படிப்பதோடு, இணையத்தில் வெளியாகும் செய்திகளையும் பார்க்கத் தவறுவதில்லை அவர்.

விரைவில் தினசரி ட்வீட்டுவார்..
லிங்கா படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினி, இனி தினமும் ட்விட்டரில் ரசிகர்களைச் சந்திக்கப் போகிறாராம். தினசரி, ஒரு ட்வீட்டைப் பதிவிடவும் முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











