நஸ்ரியா ஏன் ஒல்லியாக இருக்கிறார் தெரியுமா?: ஆர்யா விளக்கம்
சென்னை: நஸ்ரியா நஸீம் சாப்பிடுவதெல்லாம் பேச்சில் தான் போகிறது. அதனால் தான் அவருக்கு சதை போடுவதில்லை என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்துள்ள ராஜா ராணி படத்தில் நஸ்ரியா நஸீமும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பின்போது ஆர்யா நஸ்ரியா நஸீமை கலாய்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆர்யா எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் அங்கிருப்பவர்களை கலாய்ப்பதில் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இடத்தில் இருக்க மாட்டார்
நஸ்ரியா ஒரு இடத்தில் இருக்க மாட்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.

சாப்பாடெல்லாம் பேச்சுக்கே
நஸ்ரியா பேசினால் பேசிக் கொண்டே இருப்பார். அவர் சாப்பிடுவதெல்லாம் பேச்சுக்கே சரியாகிவிடுகிறது. அதனால் தான் அவருக்கு வெயிட் போட மாட்டேன் என்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன் என்றார் ஆர்யா.

திறமையான நடிகை
நஸ்ரியா ஒரு திறமையான நடிகை. அவர் திரையிலும் பப்ளியாக இருக்கக்கூடிய நடிகை என்று ஆர்யா கூறினார்.

காதல் கிசுகிசு
நஸ்ரியாவும், ஜெய்யும் திருமணம் என்னும் நிக்கா, ராஜா ராணி ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











