twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி அரசியலுக்கு வராததற்கு இது தான் காரணமா... அவரோ சொன்ன சீக்ரெட்

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் பிராண்டாக மாறி உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்தள்ளார் ரஜினி.
    ஜப்பானில் முதல் முறையாக தமிழ் படத்திற்கான வரவேற்பை துவக்கி வைத்தவர் ரஜினி. இவர் நடித்த முத்து படத்திற்கு பிறகு ஜப்பானில் பல தமிழ் படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

    உடல் வலிமையா மன வலிமையா? தாமரையின் அசர வைக்கும் நெஞ்சுரம் உடல் வலிமையா மன வலிமையா? தாமரையின் அசர வைக்கும் நெஞ்சுரம்

    கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்திய திரையுலகத்தை ஆட்சி செலுத்தி வரும் ரஜினி, மிக அரிதாகவே பொது இடங்களில் தோன்றி ரசிகர்களை சந்திப்பார். சமீபத்தில் தான் இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா

    ரஜினி அரசியலுக்கு வருவாரா

    ரஜினி படங்களை விட அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என பல காலமாக எதிர்பார்த்திருந்தவர்கள் அதிகம். கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த ரஜினி, உடல்நலத்தை கருத்தில் கொண்டு கட்சி துவங்கும் எண்ணத்தை கை விடுவதாக கடைசி நிமிடத்தில் அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது.

    தயங்குவது ஏன்

    தயங்குவது ஏன்

    இந்நிலையில் தான் அரசியலுக்கு வர தயங்குவது ஏன் என்பது பற்றி 1992 ம் ஆண்டு சிங்கபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    ரஜினியின் லட்சியம்

    ரஜினியின் லட்சியம்

    பாண்டியன் படத்தின் ப்ரொமோஷனுக்காக சிங்கபூர் சென்ற ரஜினி பேசுகையில், நான் எளிமையான ஆள். பஸ் கன்டெக்டர். அதற்கு முன் ஆஃபீஸ் பாய், கூலி, கார்பென்டர். ஏழைமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். பணக்காரனாக வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். நடிகர் ஆக வேண்டும் என நான் நினைத்தது கூட கிடையாது.

    தற்கொலை செய்ய நினைத்தேன்

    தற்கொலை செய்ய நினைத்தேன்

    வாழ்க்கையில் யாருக்காகவும், எதற்கும் பயந்தது கிடையாது நான். ஒரே ஒரு முறை தான் பயந்தேன். அப்படி பயந்து தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். பிறகு ராகவேந்திரரின் அருளால் அந்த முடிவை கைவிட்டு, உழைக்க துவங்கினேன். நான் நினைத்தபடியே பணக்காரனாக, ஒரு ஸ்டார் ஆகி விட்டேன்.

    பேச தெரிந்தால் போதும்

    பேச தெரிந்தால் போதும்

    நம்ம நாட்டில் அரசியல்வாதி ஆவதற்கு வேறு எந்த தகுதியும் வேண்டாம். பேச தெரிந்தாலே போதும் அரசியல்வாதி ஆகி விடலாம். அதனால் தான் நான் அதிகம் பேசுவது கிடையாது. நல்லவர்கள் அரசியலில் இருக்க முடியாது. நல்லவர்களை வாழ விட மாட்டார்கள். இந்தியாவில் எல்லா மொழிக்காரங்களும் இருக்காங்க. ஆனால் இந்தியாவில் இந்தியன் இல்லை. இந்தியா ஒரு புண்ணியபூமி. அங்கு இருக்க வரை இந்தியன் என்பதன் பெருமை வெளிநாட்டிற்கு போன பிறகு தான் தெரியும்.

    Recommended Video

    Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil
    ஒரு நல்ல தலைவன் வரனும்

    ஒரு நல்ல தலைவன் வரனும்

    எத்தனை அரசியல்வாதிகள் வந்தாலும் இந்தியாவின் அமைதி, நிம்மதியை கெடுக்க முடியாது. லி வாங் யூ போன்ற ஒரு நல்ல தலைவன் வந்து, புரட்சி ஏற்படும் தான் அரசியல்வாதிகளிடம் இருந்து இந்தியாவிற்கு நல்ல வழி கிடைக்கும். நான் மதவாதி அல்ல. ஆன்மிகவாதி. வியாதி இல்லாத உடலும், வேதனை இல்லாத மனமும் தான் உண்மையான சொத்து. நான் பணம் சம்பாதிக்கனும்னு அலைந்தேன் இப்போது நிம்மதி இல்லை. வாழ்க்கையில் ஆசைகள் குறையும் போது நிம்மதி வரும் னெ்றார் ரஜினி.

    English summary
    Speaking at an event in Singapore in 1992, Rajini explained why he was reluctant to enter politics. This video is currently being shared extensively by fans on the internet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X