கமலின் விக்ரம் பட தேதி அறிவிப்பு மார்ச் 14 ஏன்?...அட இதில் இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?
சென்னை : கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஏப்ரல் 28 ம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பையே மார்ச் 14 ம் தேதி வெளியிட உள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கு மார்ச் 14 ம் தேதியை தேர்வு செய்ததற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் ஒன்று உள்ளதாம்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்த படங்கள் எதுவும் வெளிவர வில்லை. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படமும் பாதியிலேயே கொரோனா, வழக்கு என கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது படத்தை துவக்குவார்கள் என்றே தெரியவில்லை.

4 ஆண்டுகளுக்கு பின் கமல் படம்
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் 110 நாட்கள் நடைபெற்ற ஷுட்டிங் முடிக்கப்பட்ட நிறைவடைந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். அதோடு ஃபகத் ஃபாசிலை கையில் துப்பாக்கியை வைத்து சுடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

ரிலீஸ் பற்றி குழப்பிய தகவல்கள்
அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முதலில் கோடை விடுமுறை ரிலீஸ் என தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

மார்ச் 14ல் ரிலீஸ் தேதி
இந்நிலையில் மார்ச் 14 ம் தேதி காலை 7 மணிக்கு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2022 ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் விக்ரம் படம் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய மூன்று பவர்ஹவுஸ்கள் பிரம்மாண்டமாக பணியாற்றி உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் மார்ச் 14ம் தேதி ?
அதிகம் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் படம் என நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்புறம் ரிலீஸ் தேதியை சொல்லாமல் ஏன் தள்ளி போடுகிறீர்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். அதிலும் காலை 7 மணி என ஏன் ஃபிக்ஸ் செய்தீர்கள் என கேட்டு வருகின்றனர். மார்ச் 14 ம் தேதியை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளதாம். மார்ச் 14ம் தேதி டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளாம். அதனால் தான் அன்றைய தேதியிலேயே படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட போகிறார்களாம்.

தள்ளி போகிறதா ரிலீஸ்?
ரிலீஸ் தேதியே மார்ச் 14 ல் சொல்கிறார்கள் என்றால், படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறதா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் செம சீக்ரெட்டாக வைத்துள்ளதாம் படக்குழு.


Click it and Unblock the Notifications











