ப்பா... இத்தனை கோடிகளா.. முதல் 3 நாட்களில் டாக்டர் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்'.
இந்தப் படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் பெஸ்ட் படம்
இந்தப் படத்தில் வினய், பிரியங்கா அருள், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உடல் உறுப்பு கடத்தலை டார்க் காமெடி படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் இதுதான் பெஸ்ட் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வசூலை குவிக்கும் டாக்டர்
இந்தப் படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி டாக்டர் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் விமர்சனங்களே வசூலை குவிக்க காரணம் என கூறப்படுகிறது.

50 சதவீத இருக்கைகள்
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறை வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

டாக்டர் படத்தால் நம்பிக்கை
பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் டாக்டர் படம் வசூலை குவித்திருப்பது நடிகர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்
இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். அதாவது கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ஜாதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப்பின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











