சிவகார்த்திகேயன் கேரியரிலேயே அதிக வசூலை குவித்த படம் இதுதான்: 100 கோடியை தாண்டினாலும் ஆச்சர்யமில்லை!
சென்னை: சிவகார்த்திகேயன் கேரியரிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை டாக்டர் படம் பெற்றுள்ளது.
தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக கேரியரை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
தனுஷின் 3 படத்தில் அவருக்கு நண்பராக நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

வெற்றி படங்கள்
தொடர்ந்து மெரினா, மனங்கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே,சீமராஜா, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரூ.25 கோடி சம்பளம்
தற்போது அயலான், மற்றும் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் ஒருவரின் படத்திலும் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவாகிறது. இந்தப் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 25 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

குழந்தை கடத்தல்
இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. குழந்தைகள் கடத்தலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

ரூ. 90 கோடி வசூல்
மேலும் வினய் வில்லனாக மிரட்டியுள்ளார். யோகி பாபு, கிங்ஸ்லே ஆகியோர் காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளனர். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்து வருகிறது. டாக்டர் திரைப்படம் இதுவரை உலகம் முழுக்க 90 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

முறியடித்த டாக்டர் படம்
சிவகார்த்திகேயனின் சினிமா கேரியலிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது இந்தப் படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படம் அதிகளவாக 86 கோடி ரூபாயை வசூலித்திருந்த நிலையில் அந்த சாதனையை டாக்டர் படம் முறியடித்துள்ளது.

கேரளாவில் ரிலீஸ்
டாக்டர் திரைப்படம் 100 கோடியை தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே டாக்டர் திரைப்படம் வரும் வியாழக்கிழமை கேரளாவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











