'கொஞ்சம் பொறுங்க ரஜினி சார்!' - டாக்டர்கள் அட்வைஸ்
தான் பூரண குணமடைந்துவிட்டதாகவும், விரைவில் ராணா தொடங்கிவிடும் என்று்ம் சூப்பர் ஸ்டார் ரஜினியே சொன்னாலும், அவரது மருத்துவர்கள் இன்னும் சில தினங்கள் படப்பிடிப்புக்குப் போக வேண்டாம் என சொல்கிறார்களாம்.
“நீங்க படப்பிடிப்பில் பங்கேற்று பழையபடி ஆக்ஷனில் அசத்தும் அளவு நன்றாக உள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள் ரஜினி சார்," என்று அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளனராம்.
இதனால் ஜனவரியில் தொடங்கவிருந்த ராணா படப்பிடிப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசின் குழந்தைகள் நல விழிப்புணர்வுப் பிரச்சாரப் படத்தில் நடிக்க ரஜினி தயாராகி வருகிறார்.
ராணா தொடங்கும் முன் இந்த கமிட்மெண்டுகளை முடித்துக் கொடுக்க விரும்புகிறாராம் சூப்பர் ஸ்டார்!
Comments


Click it and Unblock the Notifications
