»   »  என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகை நண்பர் சோ ஆகியோர் காலமான இந்த நேரத்தில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 12ம் தேதி வந்தால் ரஜினி ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. தங்கள் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.

Don't celebrate my Birthday: Rajini requests fans

இந்நிலையில் தான் ரஜினியிடம் இருந்து ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிஆர்ஓ இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

அறிவிப்பு: தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தலைவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அவர் இறந்த இரண்டாவது நாள் பத்திரிகையாளரும், ரஜினியின் நண்பருமான சோ காலமானார். இதை எல்லாம் மனதில் வைத்து தான் ரஜினி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

English summary
Rajinikanth has asked his fans not to celebrate his birthday and avoid keeping banners and posters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil