»   »  அஜீத் ரசிகர்களோடு மல்லுக்கட்டாதீங்க: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

அஜீத் ரசிகர்களோடு மல்லுக்கட்டாதீங்க: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் அஜீத் ரசிகர்களுடன் மோத வேண்டாம் என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்வது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஒருவர் ட்விட்டரில் விஜய்யிடம் தெரிவித்து ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு விஜய் பதில் அளித்து தெரிவித்துள்ளதாவது,

சண்டை

எனக்கு அது தெரியும். இது துரதிர்ஷ்டவசமானது. சண்டையை நிறுத்திவிட்டு சமூக பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு எனது ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ரசிகர்களே

ரசிகர்களே சண்டையை நிறுத்துங்கள். சின்ன விஷயத்திற்காக சண்டை போடுவதை விட நீங்கள் கவலைப்பட வேண்டிய விஷயம் பல உள்ளது. உங்களை மேம்படுத்த ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளது.

வாழ்க்கை

வாழ்க்கை

இது போன்ற வீணான விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதை விட உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாமே?

ட்விட்டர்

ட்விட்டர்

நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய ட்விட்டர் கணக்கை டிலீட் செய்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் விஜய்.

English summary
Vijay has requested his fans to stop fighting with Ajith fans in social media.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil