“ப்ளீஸ் என்னை கூண்டில் அடைத்து விடாதீர்கள்..” கெஞ்சிக் கேட்கும் நடிகர் விதார்த்!

தன்னை ஏதாவதொரு படவகையில் வகைப்படுத்த வேண்டாம் என நடிகர் விதார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை: எல்லா வகையான படங்களிலும் நடிக்க விரும்புவதாகவும், தன்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம் என்றும் நடிகர் விதார்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல நடிகர் விதார்த் கைவசம் 'காற்றின் மொழி' மற்றும் 'வண்டி' ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் 'வண்டி' படத்தை ராஜேஷ் பாலா இயக்கியுள்ளார். ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார்.

சூரஜ்.எஸ்.குருப் இசையமைத்துள்ள இதற்கு ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரூபி ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இசை மற்றும் டிரெய்லர்

இசை மற்றும் டிரெய்லர்

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

கஷ்டப்படுத்திய இயக்குனர்

கஷ்டப்படுத்திய இயக்குனர்

அப்போது பேசிய நடிகர் விதார்த், "வீரம் படத்தின் போது எனக்கு இந்த கதையை சொல்ல வந்தார்கள். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் 4 கேமரா வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குனர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரை பார்த்தாலே பயம்.

காற்றின் மொழி

காற்றின் மொழி

காற்றின் மொழி படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குனர் ராதாமோகன் என் நடிப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம்.

உதவிய தேனப்பன்

உதவிய தேனப்பன்

தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது. அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். குப்பத்து ராஜா என்ற ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை.

சூரஜ் போட்ட பாட்டு

சூரஜ் போட்ட பாட்டு

இந்த படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்திருக்கும். ஆனால் அது படத்தில் இல்லை, அந்த பாடலில் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

எல்லா வகையான படங்கள்

எல்லா வகையான படங்கள்

அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன். எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்" என இவ்வாறு நடிகர் விதார்த் பேசினார்.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்கள்

இந்த விழாவில் நிர்வாக தயாரிப்பாளர் கர்ணா ராஜா, ஸ்டண்ட் சிறுத்தை கணேஷ், பாடலாசிரியர் சங்கீத், நடன இயக்குனர் ஜாய் மதி, நாயகி சின்னு குருவில்லா, எடிட்டர் ரிஷால் ஜெய்னி, கலை இயக்குனர் மோகன மகேந்திரன், நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர், ரவி, இயக்குனர்கள் ராகேஷ், சினிஷ், எடிட்டர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X