அவன் நான் இல்லை, யாரும் நம்பாதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்
Recommended Video

சென்னை: ட்விட்டரில் தன் பெயரில் பல போலி கணக்குகள் இருப்பதாகவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் பெயரில் ட்விட்டரில் பல போலி கணக்குகள் உள்ளன. ரஜினி தூத்துக்குடிக்கு சென்ற சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதியின் போலி கணக்குகளில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

அதில் சில கருத்துகள் சர்ச்சைக்குரியனவாக இருந்தது. அந்த கருத்துகளை பார்த்ததுமே இதை விஜய் சேதுபதி கூறியிருக்க மாட்டார் என்று தெரிந்தது. இந்நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Twitter - ல் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். #விஜய்சேதுபதி என்று தெரிவித்துள்ளார்.
பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் துவங்கி கருத்து தெரிவிப்பது புதிது அன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











