இந்த விஷயத்துல சிவகார்த்திகேயன் கூட என்ன Compare பண்ணாதீங்க.. பிரபல நடிகர் பாய்ச்சல்!

சென்னை: தொடர் சறுக்கல்களை சந்தித்து வந்த நடிகர் விமல் இப்பொழுது விலங்கு என்ற அட்டகாசமான வெப் சீரிஸில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்

Recommended Video

'சும்மா இருக்கிறது எவ்வளவு சிரமம்...' மனம் திறந்து பேசிய Vimal | Tamil Filmibeat

புரூஸ்லீ பட இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த வெப் சீரிஸில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விமல் சிவகார்த்திகேயனுடன் தன்னை compare செய்ய வேண்டாமென பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

கில்லி,, குருவி, கிரீடம், பந்தயம், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்துள்ளார். பசங்க வெற்றி பெற்றதை தொடர்ந்து களவாணி, தூங்காநகரம்,எத்தன்,வாகை சூடவா, கலகலப்பு என விமல் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது.

குடும்ப ரசிகர்களை கவரும்

குடும்ப ரசிகர்களை கவரும்

இந்த நிலையில் திடீர் சறுக்கலாக விமல் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து தோல்விகளை பெற்று வருகிறது. பலரும் விமல் திரைப்படங்களை தயாரிக்க தயக்கம் காட்ட தானே தயாரித்து நடிக்க முடிவு செய்த விமல் மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

வில்லேஜ் கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து வரும் விமல் திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவரும் படங்களாகவே இருந்து வருகிறது. அதே போல மன்னர் வகையறா திரைப்படம் கிராமத்து கதையில் வெளியாகி இருந்தது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

கடைசியாக கன்னி ராசி என்ற படத்தில் நடித்திருந்த விமலுக்கு ஒரு தரமான வெற்றியை ருசித்து பல வருடங்களாகி விட்டது. இந்த நிலையில் இனி கதைகளை பார்த்து தெரிந்து இருக்க வேண்டும் என தீர்மானத்தை விமல் புரூஸ்லீ பட இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் சமீபத்தில் ஜீ5ல் வெளியான இந்த வெப் சீரிஸ் தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

விலங்கு

விலங்கு

வாகைசூடவா படத்திற்கு பிறகு விமல் மற்றும் இனியா இதில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இதுவரை காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த பாலசரவணன் இந்த படத்தில் ஒரு சீரியஸான ரோலில் நடித்து தன்னால் சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

பாராட்டுக்களைப் பெற்று வருகிறது

பாராட்டுக்களைப் பெற்று வருகிறது

மேலும் முனீஸ்காந்த், மனோகர், ரேஷ்மா, எஸ் எஸ் சக்கரவர்த்தி என பலர் நடித்துள்ள விலங்கு வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் வெற்றி குறித்து கேட்ட கேள்விக்கு விமல் கூறியுள்ள பதில் இப்போது இணையதளத்தில் வைரலாகிறது.

சிவகார்த்திகேயன் கூட என்ன Compare பண்ணாதீங்க

சிவகார்த்திகேயன் கூட என்ன Compare பண்ணாதீங்க

விமல் மற்றும் சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் இணைந்து நடித்து இருப்பார்கள். அப்போது சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார் விமல் பிஸியாக முன்னணி நடிகராக இருந்தார். ஆனால் இன்று சிவகார்த்திகேயன் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார் என விமல் மற்றும் சிவகார்த்திகேயனை compare செய்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த விமல் சிவகார்த்திகேயன் கூட என்ன compare பண்ணாதீங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அந்த மாதிரி சிவகார்த்திகேயன் தன்னுடைய ஸ்டைலில் வளர்ந்து கொண்டுள்ளார் அதேபோல் நானும் எனக்கான ஸ்டைலில் போராடி பயணித்துக் கொண்டுள்ளேன் எனவே யாரையும் யார் கூடயும் compare பண்ணாதீங்க. என சக நடிகரை விட்டுக்கொடுக்காமல் விமல் பேசியுள்ள அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X