''இதுதாண்டா துணி''... மனைவியுடன் அதிரடி யாவாரத்தில் குதித்த டாக்டர் ராஜசேகர்....!
ஹைதராபாத்: இதுதாண்டா போலீஸ், எவன்டா உங்க எம்.எல்.ஏ போன்ற அதிரிபுதிரியான டப்பிங் படங்கள் மூலம் தமிழ் திரையுலகை ஒரு காலத்தில் கத்திக் குத்திக் கிழித்த டாக்டர் ராஜசேகர் தற்போது புது பிசினஸில் குதித்துள்ளார்- தனது மனைவியுடன்.
டாக்டர் ராஜசேகரும், மனைவி நடிகை ஜீவிதாவும் இணைந்து நீண்ட காலமாக தெலுங்குத் திரையுலகில் முக்கியத் தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
அதிரடி ஆவேசப் படங்களுக்குப் பெயர் போனவர் ராஜசேகர். அவரது படங்களுக்கு தமிழ்நாட்டிலும் நல்ல டிமாண்ட் இருந்தது ஒரு காலத்தில்.

பாரதிராஜா கையால்
பாரதிராஜாவின் கையால் தமிழில் நடிகராக அறிமுகமானவர் டாக்டராக இருந்த ராஜசேகர்.

ஹிட்டடித்த இதுதாண்டா போலீஸ்
தமிழில் அவருக்கு நல்ல எதிர்காலம் இல்லை. எனவே தெலுங்குக்குத் தாவினார். அங்கு அவர் நடித்த படம் தமிழில் இதுதாண்டா போலீஸ் என்ற பெயரில் அறிமுகமாகி ராஜசேகரை ஒரு ரணகளமான அதிரடி நாயகனாக தமிழிகத்தில் அறிமுகப்படுத்தியது.

அப்புறம், எவனா இருந்தா எனக்கென்ன
தொடர்ந்து எவனா இருந்தா எனக்கென்ன, எவன்டா உங்க எம்.எல்.ஏ என்று ஏக வசனத்தில் வைக்கப்பட் டைட்டில்களும், ஏகப்பட்ட வசனமும், எக்குத்தப்பான அடிகளையும் கொண்ட படங்கள் மூலம் ராஜசேகர் தமிழ்நாட்டைஒருகலக்கு கலக்கினார்.

இப்ப துணி வியாபாரம்
இந்த நிலையில் தற்போது டாக்டர் ராஜேசகரும், அவரது மனைவியும் இணைந்து ஹைதராபாத்தில் ஒரு ஜவுளிக் கடை தொடங்கியுள்ளனராம். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இந்தக்கடை அமைந்துள்ளது.

நடுத்தர மக்களை குறி வைத்து
கடை குறித்து ஜீவிதா கூறுகையில், நடுத்தர மக்களின் நலனுக்காகவே இந்தக் கடையைத் திறந்துள்ளோம். பிரபலமான கடைகளில் கிடைக்கும் பேஷன் டிரஸ்கள் இங்கு குறைந்த விலையில் கிடைக்கும் என்றார் ஜீவிதா.
சூப்பர்டா...!


Click it and Unblock the Notifications











