த்ரிஷயம் ரீமேக்கில் நடிக்க மறுத்த ரஜினி, ஓகே சொன்ன கமல்
சென்னை: மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படமான த்ரிஷயமின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டாராம்.
மோகன்லால், மீனா நடிப்பில் அண்மையில் வெளியான மலையாள படம் த்ரிஷ்யம். விமர்சகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் படத்தை தியேட்டர்களில் பார்த்து அதை சூப்பர் ஹிட்டாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஜீத்து ஜோசப்
மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் அதை தமிழிலும் இயக்குகிறார். தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரஜினி
த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்குமாறு முதலில் ரஜினியிடம் கேட்டதாக ஜீத்து தெரிவித்துள்ளார். ரஜினிக்கு கதை பிடித்திருந்தபோதிலும் சில காட்சிகளை தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டதாக ஜீத்து மேலும் தெரிவித்தார். அதனால் தான் ரஜினி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம்.

கமல்
ரஜினி நடிக்க மறுத்ததையடுத்து கமலிடம் கதை சொல்லப்பட்டுள்ளது. கதை கமலுக்கு பிடித்துப் போகவே அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

கதை
கமல் ஒரு எழுத்தாளர். அவர் த்ரிஷ்யம் கதையில் சில மாற்றங்களை கொண்டு வர என்னிடம் உறுதி அளித்துள்ளார். நாங்கள் இருவரும் உட்கார்ந்து திரைக்கதையை இறுதி செய்வோம் என்றார் ஜீத்து.

தெலுங்கு, இந்தி
த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக் வேலை துவங்கிவிட்டது. தெலுங்கில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











