அரேபிய ஷேக்குகளே அஜித்தை பார்த்து ஷேக் ஆகுறாங்களே.. சிங்கம் போல என்ட்ரி கொடுத்த அஜித்.. செம வீடியோ!
சென்னை: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளும் போது கூட அவருக்கு இந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஆர்பரித்தது கிடையாது என்றும் அஜித் குமார் அவரை விட பெரிய தலைக்கட்டாக இருப்பார் என கமெண்ட்டேட்டர்கள் பேசியதே ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியது.
தனது சொந்த அணியின் நலன் கருதி நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் பங்கேற்கப் போவதில்லை என்று பின் வாங்கினாலும் ஆஸ்திரேலிய அணியான ரஸூன் அணியில் கார் டிரைவராக அவர் கலந்துக் கொண்டு தனது ரேஸ் தாகத்தையும் தீர்த்துக் கொள்ள உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் குமார் கார் பந்தய அரங்குக்குள் நுழையும் காட்சிகளை துபாயில் உள்ள அரேபிய ஷேக்குகளே செல்போன்களில் வீடியோவாக எடுக்கும் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.
ஓனராக உஷாரான அஜித்: நடிகர் அஜித் குமார் சொந்தமாக அஜித் குமார் ரேஸிங் என்கிற அணியை துபாயில் நடைபெறும் 24 மணி நேர கார் பந்தய போட்டியில் பங்கேற்க வைத்துள்ளார். அந்த அணியில் அஜித் குமார் கார் ஓட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது அணியின் நலன் கருதி தனது அணிக்காக பந்தயத்தில் பங்கேற்கப் போவதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறார்.
சிங்கம் போல என்ட்ரி: ஆனால், மற்றொரு கார் பந்தய அணியில் ரேஸராக நடிகர் அஜித் பங்கேற்பார் என சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் கார் ஓட்டுவது உறுதியாகி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது. சிங்கம் போல கார் பந்தயம் நடைபெறும் இடத்துக்கு நடிகர் அஜித் குமார் வந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஷேக்குகளே ஷேக் ஆகிட்டாங்க: பொதுவாக அரேபியர்களை பார்த்தால் தான் அசந்து போய் மற்றவர்கள் பார்ப்பார்கள். ஆனால், அஜித் குமாரை பார்க்க அந்த அரேபிய ஷேக்குகளே செல்போனை எடுத்துக் கொண்டு வீடியோ எடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது. இந்த போட்டியில் அஜித் குமாரின் அணி வெற்றி பெற வேண்டும் என்றும் அஜித் குமார் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் கார் ஓட்ட வேண்டும் என்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











