ரஜினி இங்கதான் ஹீரோ.. அங்கெல்லாம் அவர் அப்படி இல்லை.. சீக்ரெட் சொன்ன பிரபலம்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவரது நடிப்பில் கூலி படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரிலீஸூக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்தார். அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து ட்ரோலுக்கும் உள்ளானது. இதன் காரணமாக அவரது நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உணர்த்தியது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 700 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது.
வேட்டையன் பராக்: அந்தப் படத்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம்போல் ரஜினிகாந்த்தின் நடிப்பு அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. அதனை பார்த்த ரசிகர்களோ இவருக்கு வயது ஆகிறதா இல்லையா என்று சந்தேகப்பட்டனர். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி ரஜினிகாந்த்: தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் முடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடம் இருக்கிறது. படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கூலி படத்தை முடித்த அவர் ஜெயிலர் 2வில் இப்போது நடித்துவருகிறார். இரண்டு படங்களுமே அவரது கரியரில் அதிக வசூல் செய்த படங்கள் என்ற பெயரை எடுக்கும் என ரசிகர்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
ராஜேந்திரன் பேட்டி: இதற்கிடையே ரஜினிகாந்த் என்று சொன்னால் கூடவே இன்னொரு விஷயமும் நியாபகத்துக்கு வரும். இமயமலைதான் அது. அடிக்கடி அங்கு செல்லும் ரஜினிகாந்த்; அங்கேதான் நிம்மதியை உணர்வதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் பிரபல டப்பிங் கலைஞர் ராஜேந்திரன் ரஜினி குறித்து பேசுகையில், "வள்ளி படத்தில் நான் பணியாற்றினேன். அப்போது ரஜினியின் கைகளை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தசமயத்தில் ஒரு வித அதிர்வை நான் உணர்ந்தேன். ரஜினிகாந்த் ஒரு கடவுள். எதிர்காலத்தில் திருவண்ணாமலைஇல் அவருக்கு ஒரு ஆசிரம் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன.
இங்கேதான் அவர் ஹீரோ: அதேபோன்று ரஜினிகாந்த் இங்கேதான் பெரிய ஹிரோ. ஆனால் இமயமலையில் இருக்கும் கேதர்நாத், பத்ரிநாத் இடங்களுக்கு சென்றால் அவரை குருஜி என்றுதான் கூற வேண்டும் என ஆட்டோக்காரர் என்னிடம் கோபமாக சொல்லியிருக்கிறார். அந்தப் பகுதிகளுக்கு நான் சென்றபோது பல சாமியார்களின் புகைப்படங்களுடன் ரஜினியின் புகைப்படம் இருந்ததையும் நான் பார்த்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











