அந்தப் பெயரை எப்படி வைக்கலாம்? மீண்டும் சர்ச்சை.. மன்னிப்புக் கேட்டார் பிரபல ஹீரோ துல்கர் சல்மான்!

By

சென்னை: தான் தயாரித்து நடித்த படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால் மன்னிப்பு கேட்டிருக்கிறார், துல்கர் சல்மான்.

Recommended Video

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட Dulquer Salman | Prabhakaran

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'.

சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி, மேஜர் ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையானது. இதையடுத்து அவரிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டார். இப்போது, மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

படத்தில், நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து காமெடி காட்சி அமைத்துள்ளனர். இந்த பெயரை நாய்க்கு எப்படி வைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். துல்கர் சல்மானையும் சரமாரியாக விளாசினர். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பழைய காமெடி

பழைய காமெடி

இதையடுத்து தனது ட்விட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான்.
அதில், 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். உள்நோக்கத்துடன் அதை வைக்கவில்லை. 'பட்டண பிரவேஷம்' என்ற பழைய மலையாளப் படத்தில் வரும் காமெடி அது.

இழுக்க வேண்டாம்

இழுக்க வேண்டாம்

கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல், அது யாரையும் குறிப்பிடுவது இல்லை. படத்தைப் பார்க்காமலேயே பலர் வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, படத்தின் இயக்குனரையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதில் எங்கள் தந்தைகளையோ, இதில் நடித்துள்ள மூத்த நடிகர்களையோ இழுக்க வேண்டாம்.

மன்னிப்புக் கேட்கிறேன்

மன்னிப்புக் கேட்கிறேன்

காயப்பட்டிருப்பதாக நினைக்கும் அனைத்துத் தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் வார்த்தைகள் மூலமோ, படங்கள் மூலமோ, யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது தவறான புரிதலின் விளைவு' என்று கூறிள்ளார். அதோடு, 'பட்டண பிரவேஷம்' படத்தின் காமெடிக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X