அன்பு மகள் போட்ட பட்டாம்பூச்சி டாட்டூ.. ட்விட்டரில் பகிர்ந்த துல்கர் சல்மான்!
சென்னை: தன் மகள் போட்ட நெய்ல்பாலிஷ், டாட்டூவை இணையத்தில் பகிர்ந்தார் நடிகர் துல்கர் சல்மான்.
Recommended Video
நடிகர் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து குரூப் படத்தில் நடித்து வந்தார் துல்கர்.

இந்த ஊரடங்கு காரணமாக இப்படத்தை தற்போது நிறுத்திவைத்துள்ளனர். வீட்டில் குடும்பத்துடன் தன் நேரத்தை கழிக்கும் துல்கர். சமைப்பதுடன் தனது பெயரை "செஃப் கியூ" என்றும் மாற்றிக்கொண்டுள்ளார். அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். இன்று என்ன சமையல் துல்கர், சொன்னால் நாங்களும் ட்ரை செய்வோம் என்று அனைவரும் கமெண்ட்ஸ் செய்தனர்.
சமையல் வேலை முடிந்தவுடன் பொறுப்பான அப்பாவாக மாறி தன் குழந்தை மர்யம் அமிராஹ் உடன் நேரம் செலவிடுகிறார். அவரது மகள் அவருக்கு நெய்ல்பாலிஷ் போட்டுவிட்டதுடன் பட்டாம்பூச்சி ஓவியத்தை அவர் கையில் டாட்டூ போல வரைந்துவிட்டுள்ளார்.

அவர் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பகிரப்பட்ட சில நேரங்களிலேயே பல லைக்ஸ் வந்ததுடன் அனைவரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர். அப்பாவாக தன் வேலையை சரியாக செய்து வருகிறார் என்றும் கமெண்ட்ஸ் வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின் ஸ்ரீ நாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் குரூப் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹே சினாமிகா என்ற புது படத்திலும் நடிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











