ரஜினி, விஜய் மாதிரி இல்ல.. மம்முட்டி மகன் ரொம்ப உஷார்தான்..என்ன டிவீட் போட்டிருக்கார் பாருங்க!

படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டாம் என நடிகர் துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

Vogue India Magazine: தெறிக்கவிடும் தென் இந்தியா நடிகர்கள்

திருவனந்தபுரம்: தனது படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் எடுக்க தனது ரசிகர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் தடை உத்தரவு போட்டிருக்கிறார்.

முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளை பார்க்க அவர்களின் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி அவர்கள் படப்பிடிப்பு தளங்களுக்கு போகும் போது, அதை போட்டோ எடுத்து தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட படத்திற்கு பெரும் பிரச்சினையாக மாறிவிடுகிறது. இப்போதெல்லாம் தங்கள் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை சன்பென்ஸாக வைத்திருந்து, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என நடிகர்களும், இயக்குனர்களும் நினைக்கின்றனர்.

லீக்காகும் புகைப்படங்கள்

லீக்காகும் புகைப்படங்கள்

ஆனால் ரசிகர்கள் இவ்வாறு செய்யும் போது அதன் சஸ்பென்ஸ் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. தர்பார், இந்தியன் 2, தளபதி 64 ஆகிய படங்களின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி, படக்குழுவுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தின.

சுகுமாறா குருப்

சுகுமாறா குருப்

அதேபோல் தான் துல்கர் சல்மான் நடிக்கும் படத்திற்கும் நேர்ந்திருக்கிறது. ஒருகாலத்தில் கேரளாவையே மிரட்டிய மிக பயங்கர குற்றவாளியான 'சுகுமாறா குருப்'பின் வாழ்க்கையை தழுவி, குருப் என்ற படத்தில் துல்கர் நடித்து வருகிறார்.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தான் துவங்கியது. கேரளாவின் மிக முக்கிய குற்றவாளியின் வாழ்க்கை படம் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதில் துல்கரின் லுக் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.

படக்குழு அதிர்ச்சி

படக்குழு அதிர்ச்சி

இந்த சூழலில் குருப் படப்பிடிப்பு தளத்தில் இருந்து துல்கர் சல்மானின் படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகின. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சி அடைந்தது. துல்கருக்கும் இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

ரசிகர்களுக்கு தடை

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துல்கர், "புகைப்படங்கள் இணையத்தில் கசிவதால் எங்களுடைய உழைப்பு வீணாகிறது. எனவே ரசிகர்கள் யாரும் படப்பிடிப்பு தளங்களில் இருந்து புகைப்படம் எடுக்கவும், அதை இணையத்தில் பதிவிடவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பாதுகாப்பை அதிகரிக்க உள்ளோம்", என தெரிவித்துள்ளார்.

படக்குழு மகிழ்ச்சி

படக்குழு மகிழ்ச்சி

துல்கரின் இந்த பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் எடுக்க துல்கர் தடைவிதித்திருப்பதாகவே அவர் கருதுகின்றனர். எனினும், துல்கரின் இந்த பதிவு, படக்குழுவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X