சாக்லெட் பாய் துல்கர் சல்மான்.. சிறு வயசு போட்டோ.. வாய் பிளக்கும் பெண் ரசிகைகள்!
சென்னை : மலையாள மெகாஸ்டார் மம்மூட்டியும் அவரது மகன் துல்கர் சல்மானும் இருக்கும் பழைய போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Recommended Video
வாயை மூடி பேசவும் படம் மூலம் தமிழ்திரை உலகில் கால் பதித்த துல்கர் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார். தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் "ஓ காதல் கண்மணி" அந்த படத்தில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். குறிப்பாக பெண் ரசிகர்களின் கனவு நாயகனாக மாறினார் துல்கர். அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியும் இன்றும் இப்படம் ரசிகர்களிடையே பேசப்பட்டு தான் வருகின்றது.

சமீபத்தில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படமும் அவருக்கு மெகாஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் துல்கருக்கும், ரக்ஷனுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்கவுட் ஆனது. கொரோனா பாதிப்பு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் பிஸியாகவே இருக்கிறார்.

சமீபத்தில் அவர் மகளுடன் அவர் செய்த லூட்டிகளை இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு பல லைக்ஸ்களை அள்ளியதுடன் பல பாசிடிவ் கமெண்ட்ஸும் பெற்றார். இது ஒருபுறம் இருக்க மலையாளத்தில் அவர் முதல் முதலாக தயாரித்த திரைப்படம் "வரனே அவஷ்யமுண்டு "பல சர்ச்சைகளை ஏற்படுத்தி அவர் இருமுறை மன்னிப்பு கேட்டு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது இவர் சிறுவயதில் எடுத்த போட்டோ ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தந்தை மம்மூட்டியுடன் சன்கிளாஸ் அணிந்து கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படம் துல்கர் ரசிகைகளை மீண்டும் ஒரு முறை கிறங்கடிக்க செய்திருக்கிறது. சிறுவயதிலே இவ்ளோ அழகா என்று வாயை பிளக்கின்றனர் பெண் ரசிகைகள். இந்த புகைப்படத்திற்கு மக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











