லாக்டவுனில் ..அடையாளம் தெரியாமல் மாறிய துல்கர் சல்மான்… ரசிகர்கள் ஷாக்!
கொச்சி : பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர்.
வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான துல்கர் சல்மான் இப்பொழுது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், லாக் டவுனில் சுத்தமாக ஆளே மாறிப் போயுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர்.

மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத் துறையில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டு பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான்.

அங்கேயும் பிரபலமாகி
பிரபல மூத்த நடிகர் மம்முட்டியின் மகனான இவர் இப்பொழுது மலையாளம் மற்றும் தமிழில் பல்வேறு திரைப்படத்தில் நடித்து வருவதோடு ஹிந்தியிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்து அங்கேயும் பிரபலமாகி வருகிறார்.

எதிர்பாராத வெற்றி
இந்நிலையில் திரைப்படங்களில் செம ஸ்மார்ட்டாக பெண்கள் பலரும் விரும்பும் கனவுக் கண்ணனாக வலம்வந்த துல்கர் சல்மான் சமீபத்தில் தமிழில் நடித்திருந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் திரையில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வசூலை வாரி குவித்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஹேய் சனாமிகா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்கு பிறகு நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கிவரும் "ஹேய் சனாமிகா " திரைப்படத்தில் நடித்து வரும் துல்கர் சல்மான், லாக் டவுனில் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் குடும்பத்தாருடன் இருந்து வருகிறார்.

லுக்கை பார்த்து ரசிகர்கள்
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள துல்கர் சல்மானின் இப்போது இருக்கும் லுக்கை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகி போயுள்ளனர்.

பார்க்கவே வித்தியாசமாக
கச்சிதமான ஹேர் கட், ஃபிட்டான உடல் அமைப்பு என பார்க்க எப்போதும் பிரஷ்ஷாகாவும் ஸ்மார்ட்டாகவும் வலம்வந்த துல்கர், இப்பொழுது மிக நீண்ட சுருள் முடியுடன் தாடியும் முறுக்கு மீசையுமாக பார்க்கவே வித்தியாசமாக காட்சி அளிக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன துல்கர் லாக்டவுன்ல இப்படி மாறிட்டாரு என ஷாக்காகி போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











