துல்கர் சல்மானுக்கு 40 வயது.. மகனுக்கு எமோஷனல் வாழ்த்து சொன்ன மெகா ஸ்டார்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் இன்று தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துல்கர் சல்மானின் அப்பாவும் மலையாள சூப்பர் ஸ்டாருமான மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான Mammootty Kampany வெளியிட்ட பிறந்தநாள் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

துல்கர் சல்மானுடன் மம்முட்டி இணைந்து நிற்கும் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ள Mammootty Kampany, "இன்னும் பல நல்ல கதைகள், மறக்க முடியாத கதாபாத்திரங்கள், சினிமா கெரியரில் பல சாதனைகள் சேரட்டும். சினிமா மீதான உங்கள் அர்ப்பணிப்பும், ரசிகர்களுக்கு எப்போதும் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் மெனக்கெடுவதும் ரசிகர்களுக்க்கு உத்வேகம் அளிக்கிறது. இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, நல்ல உடல்நலம் மற்றும் இன்னும் பெரிய வெற்றிகளை கொண்டு வரட்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளது.

துல்கர் சல்மான் கடந்த சில ஆண்டுகளாக மலையாளத்தைக் கடந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் இந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.

Dulquer Salmaan Turns 40 Mammootty Kampany s Emotional Birthday Wish and Father-Son Photo Go Viral

எமோஷனல் வாழ்த்து: துல்கர் சல்மானுக்கு மலையாள சினிமா உலகத்தினர் மட்டும் இல்லாமல் தமிழ் திரையுலகத்தினர், தெலுங்கு திரையுலகத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், துல்கரின் அப்பாவும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அன்பாக தெரிவிக்கப்பட்டுள்ள வாழ்த்தானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் வாழ்த்து: இன்று அவரது 40-வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் #HappyBirthdayDulquerSalmaan என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மம்முட்டி நிறுவனத்தின் இந்த எளிமையான, ஆனால் எமோஷனலான வாழ்த்து பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. தந்தை - மகன் இணைந்து இருக்கும் அந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X