இந்தியன் 2 படத்தில் மற்றுமொரு ஹேண்ட்சம் ஹீரோ…! கமலுடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்!

இந்தியன் 2 படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

Dulquer Salman acts in Indian 2!

இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் கடைசியாக நடிகையர் திலகம் திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார்.

இந்தியன் முதல் பாகத்தில் சந்துருவாக வரும் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா சேனாபதியால் கொலை செய்யப்பட்டுவிடுவார். அதானால் சந்துரு கதாபாத்திரம் இந்தியன் 2 படத்தில் தொடர்வதற்கு வாய்ப்பில்லை. அதனால் துல்கர் சல்மான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனத் தெரியவில்லை.

இந்தியன் படத்தில் சேனாபதி குறித்து புலன்விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரியாக நடித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்தியன் தாத்தா கதாபாத்திரத்திற்கான கிரேஸ் இன்றுவரை குறையாமல் இருப்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கமல்ஹாசன் உடலளவிலும் மனதளவிலும் தயாராகி வருகிறார். அமெரிக்க பயிற்சியாளர் கண்கானிப்பில் சிறப்பான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X