அப்பா மம்மூட்டியை தொடர்ந்து மகன் துல்கர் சல்மானையும் விடாத கொரோனா.. கேரளாவில் அதிகரித்த பாதிப்பு!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா பரவிய நிலையில், அவரது மகனும் முன்னணி நடிகருமான துல்கர் சல்மானுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் நாளுக்கு நாள் மின்னல் (முரளி) வேகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ஆனாலும், குரூப் குரூப்பாக ஷூட்டிங் ஸ்பாட்களில் நடிகர்கள் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

46 ஆயிரம் கேஸ்கள்

46 ஆயிரம் கேஸ்கள்

கேரளாவில் நேற்றை விட 35.6 சதவீதம் அதிகரித்து 46,387 பேர் இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பிப்ரவரி மாதம் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்பு உச்சத்தை அடையும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அப்பாவுக்கு கொரோனா

அப்பாவுக்கு கொரோனா

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி கடந்த ஜனவரி 16ம் தேதி தனக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 70 வயதாகும் நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா பாதித்த நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியடைந்து விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனைகளை செய்தன.

துல்கருக்கும் கொரோனா

துல்கருக்கும் கொரோனா

இந்நிலையில், 4 நாட்கள் கழித்து தற்போது நடிகர் துல்கர் சல்மான் தனக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். லேசான கொரோனா பாதிப்பு தான் என்றும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் ரசிகர்கள் தவறாமல் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

குணமடைய வாழ்த்திய குஷ்பு

குணமடைய வாழ்த்திய குஷ்பு

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ஹே சினாமிகா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான க்ரூப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை குஷ்பு துல்கர் சல்மான் ட்வீட்டுக்கு கீழ் ஒன்றும் கவலைப்படாதே DQ நல்லா ரெஸ்ட் எடுங்க.. விரைவில் பரிபூரணமாக குணமாகி வர வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

நடிகர் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என மலையாள திரையுலக ரசிகர்கள் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏகப்பட்ட பிரபலங்களும் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X