விஜய் ஒரு சூப்பர் ஹீரோ... அவரோட நடனத்துக்கு நான் ரசிகன்... துல்கர் சொல்லியிருக்காரு!
திருவனந்தபுரம் : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ளது குருப் படம். இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் ஒரு சூப்பர் ஹீரோ எனவும் அவரது நடனத்திற்கு தான் ரசிகன் எனவும் துல்கர் தெரிவித்துள்ளார்.
வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யின் நடனத்தை பார்த்து தான் ஆச்சர்யமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் சிறப்பான ஹீரோவாக வலம் வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. தமிழிலும் நடன இயக்குநர் பிருந்தா இயக்கிவரும் ஹே சினாமிகா என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

ஹே சினாமிகா படம்
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் டீசர், ட்ரெயிலர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடன இயக்குநரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கண்டிப்பாக நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குருப் படம் ரிலீஸ்
இந்நிலையில் இவரது நடிப்பில் குருப் என்ற படம் தற்போது ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்துள்ளது. 1984 முதல் கேரள போலீசாரால் தேடப்பட்டு வரும் சுகுமாரா குருப் என்பவரின் கதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

துல்கர் தயாரிப்பு
படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபோர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.

சிறப்பான வரவேற்பு
படம் வெளியான முதல் நாளிலேயே சிறப்பான வசூலையும் குவித்துள்ளது. தமிழிலும் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. படத்தின் விளம்பரப்பணிகளில் முன்னதாக துல்கர் ஈடுபட்ட நிலையில் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் ஒரு சூப்பர் ஹீரோ
விஜய் சூப்பர் ஹீரோ போன்றவர் என்று கூறியுள்ள துல்கர் சல்மான், அவரது நடனத்திற்கு என்றுமே தான் ஒரு ரசிகன் என்றும் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய்யின் நடனத்தை பார்த்து தான் மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











