அப்பா ஓகே சொல்வாரா... ஏக்கத்தில் துல்கர் சல்மான்... எதுக்காக தெரியுமா?

திருவனந்தபுரம் : நடிகர் துல்கர் சல்மான் தற்போது தமிழில் ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளியான குரூப் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் இவர் தனது நீண்ட நாள் ஆசை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான்

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிகர் மம்முட்டியின் மகன். இருந்த போதிலும் இவர் தன்னுடைய திறமையால் மட்டுமே தொடர்ந்து நடிகராக நீடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் காதல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் தற்போது ஆக்ஷனில் பின்னி பெடலெடுக்கிறார்.

செகன்ட் ஷோ படத்தில் அறிமுகம்

செகன்ட் ஷோ படத்தில் அறிமுகம்

கடந்த 2012ம் ஆண்டு செகன்ட் ஷோ என்ற மலையாள படத்தின்மூலம் நாயகனாக அறிமுகமான துல்கர் சல்மான், ரசிகர்களுக்கு குறிப்பாக பெண் ரசிகைகளுக்கு மிகவும் பிடித்தமானவராக இருக்கிறார். இவரது கேரியரில் உஸ்தாத் ஹோட்டல் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

சிறப்பான குரூப்

சிறப்பான குரூப்

சமீபத்தில் துல்கர் நடிப்பில் வெளியான குரூப் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத்தந்துள்ளது. பயோ பிக் படங்களில் நடிப்பது தனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று என்றும் குரூப் கதையில் நடிக்க தனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் பேசியதாகவும் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குரூப் படத்தை மறுத்த துல்கர்

குரூப் படத்தை மறுத்த துல்கர்

ஆனால் தான் அப்போது அதை மறுத்ததாகவும் நடிப்பில் கொஞ்சம் தேறிவிட்டு இதுபோன்ற கதையை தேர்ந்தெடுக்க உள்ளதாக குறிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது தமிழில் ஹே சினாமிகா என்ற படத்தில் நடன மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

Recommended Video

KURUP Review Tamil | Dulquer Salmaan | Srinath Rajendran | yessa? bussa? | Filmibeat Tamil
அப்பாவுடன் இணைய ஆசை

அப்பாவுடன் இணைய ஆசை

இதனிடையே தான் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் துல்கர். ஆனால் இதற்கு அவரது அப்பா மம்முட்டி ஓகே சொல்வாரா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் தனித்தனியாக தங்களது கேரியரை தொடர்வதே சிறப்பானது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X