Legend Saravanan: தனுஷ் பட இயக்குநரை லாக் செய்த லெஜண்ட் சரவணன்.. இனிமே சம்பவம் தரமா இருக்கணும்!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் விளம்பாப் படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். கூடிய சீக்கிரமே புதிய பட அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போறாங்க என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது.

தி லெஜண்ட் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, காமெடி நடிகர் விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க பிரம்மாண்டமாக படத்தை உருவாக்கி இருந்தனர். அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

Durai Senthilkumar will direct Legend Saravanan next movie?

இந்நிலையில், அடுத்த படத்தை மேலும், சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என இயக்குநர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட லெஜண்ட் சரவணன் தற்போது தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் துரை செந்தில் குமாரை லாக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி லெஜண்ட்: விசில் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி ஏகப்பட்ட விளம்பரப் படங்களை இயக்கி வந்த நிலையில், தி லெஜண்ட் படத்தையும் இயக்கினர். ஜவுளிக்கடை அதிபரான லெஜண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஹீரோவான நிலையில், தனது சொந்த தயாரிப்பில் அந்த படத்தை எடுத்து முடித்தார். மணாலி உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட அந்த படம் பெரிதாக ஓடவில்லை.

துரை செந்தில்குமார் இயக்குகிறார்: இந்நிலையில், தனது அடுத்த படத்தை துரை செந்தில்குமாரை வைத்து இயக்க லெஜண்ட் சரவணன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, தனுஷின் கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் தற்போது சூரி, சசி குமார் நடிப்பில் உருவாகி வரும் கருடன் படத்தை இயக்கி வருகிறார். வெற்றிமாறனின் உதவி இயக்குநரான துரை செந்தில் குமார் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் நிலையில், அடுத்து லெஜண்ட் சரவணன் படத்தை இயக்க உள்ளதாக கூறுகின்றனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் கிராமத்து இளைஞனாக நடிக்கத்தான் லெஜண்ட் சரவணன் தாடி வளர்த்து வருகிறாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் அடுக்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X