twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல், நயனுக்கு பயந்து ஆர்யாவுடன் போட்டி போடும் 10 படங்கள்!

    ஆகஸ்டு மாதம் 3ம் தேதி, மொத்தம் 11 படங்கள் ரிலீசாக இருக்கின்றன.

    |

    சென்னை: ஆர்யாவின் கஜினிகாந்த் ரிலீசாக உள்ள ஆகஸ்டு மாதம் 3ம் தேதி, மொத்தம் 11 படங்கள் ரிலீசாக இருக்கின்றன.

    ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள திரைப்படம் கஜினிகாந்த். இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், அதே தினத்தில் தம்பி ராமையாவின் மணியார் குடும்பம், குள்ளநரிக் கூட்டம் பட இயக்குனரின் எங்க காட்டுல மழை, காட்டுப்பய சார் இந்த காளி, உள்பட மொத்தம் 11 படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கமல், நயன்தாரா படங்கள்

    கமல், நயன்தாரா படங்கள்

    இப்படி ஒரே நாளில் போட்டி போட்டுக்கொண்டு, 11 படங்கள் ரிலீசாக காரணம், கமலின் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10ம் தேதியும், நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 17ம் தேதியும் ரிலீசாவது தான். முன்னதாக கோலமாவு கோகிலாவும் விஸ்வரூபம் 2 படத்துடன் சேர்ந்து வெளியாவதாக இருந்தது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் தியேட்டர் பிரச்சினை காரணமாக படத்தின் வெளியீட்டை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.

    ஏற்கனவே ஓடும் படங்கள்

    ஏற்கனவே ஓடும் படங்கள்

    ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான கடைக்குட்டி சிங்கமும், தமிழ்படம் 2வும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் ரிலீசான விஜய் சேதுபதியின் ஜுங்காவும், திரிஷாவின் மோகினியும் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

    தியேட்டர்கள் கிடைக்காது

    தியேட்டர்கள் கிடைக்காது

    இதனால் ஆகஸ்ட் 3ம் தேதி ரிலீசாகும் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆனால் கடைக்குட்டி சிங்கம் படத்தின் விநியோகஸ்தரான சக்தி பிலிம் பேக்டரிதான் மணியார் குடும்பம் படத்தையும் வெளியிடுகிறது. பெரிய விநியோகஸ்தர் என்பதால் இந்த படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது.

    ஆர்யாவுக்கு பிரச்சினை இல்லை

    ஆர்யாவுக்கு பிரச்சினை இல்லை

    அதேபோல, கஜினிகாந்த் படத்தை வெளியடும் அபினேஷ் இளங்கோவனும் பெரிய விநியோகஸ்தர் தான் என்பதாலும், படத்தை தயாரித்திருப்பது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் என்பதாலும் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் இருக்காது. ஆனால் மற்ற சிறு படங்களுக்கு தான் தியேட்டர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்

    தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்

    காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, அழகுமகன், போயா, அரளி, கடிகார மனிதர்கள், உப்பு புளி காரம், நாடோடி கனவுகள், கடல் குதிரைகள் என ரிலீஸ் தேதியை அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ள இவை அனைத்துமே சிறுபட்ஜெட் படங்கள் தான். இந்த படங்கள் அனைத்தும் இந்த வாரமே ரிலீசானாலும், அடுத்த வாரம் வரைக்கும் தாங்குமா என்பது சந்தேகமே. எனவே இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    சங்கத்தின் முடிவு

    சங்கத்தின் முடிவு

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'சங்க விதிகளின் படி ஒரே நேரத்தில் இத்தனை படங்களை ரிலீசுக்கு அனுமதிக்க முடியாது. படங்களின் ரிலீஸ் தேதியை அவர்கள் வெளியிட்டாலும், சங்கம் என்ன முடிவு செய்கிறதோ அது தான் இறுதி. அடுத்தடுத்து தியேட்டர்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர்கள் தெரிவித்தனர்.

    தொடர் கதை

    தொடர் கதை

    தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாகும் போது, மற்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் பிரச்சினை ஏற்படுவது தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகாமல் இருக்கும்.

    English summary
    On August 3rd 11 movies have been lined up for release including Arya's Gajinikanth and Thambi Ramaiah directorial Maniyar Kudumbam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X