மழையில் நனைந்து செம ரொமான்ஸ்… என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

சென்னை : குக் வித் கேமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மழையில் நனைந்தபடி ரொமான்டிக்காக வெளியாகி உள்ள போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அஸ்வின்

அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின். எப்போதும் சிரித்துக்கொண்டு க்யூட்டாக வரும் அஸ்வினுக்கு ஏராளமான ரசிகைகள். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 3 மில்லியன் பாலோவர்ஸ் வந்திருக்கின்றனர். அஸ்வினை அதிகமாக பின்தொடர்பவர்கள் பெண் ரசிகைகள். இப்படி பெண்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார் அஸ்வின்.

அஸ்வின் கதாநாயகனாக

அஸ்வின் கதாநாயகனாக

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டி சென்ற அஸ்வின் அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹீரோ அஸ்வினும், காமெடியன் புகழும் இணைந்து 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நடித்து வருகின்றனர். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புது இயக்குனர்

புது இயக்குனர்

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தினை இயக்கியுள்ளார். அதில் அவந்திகா மிஸ்ரா,தேஜு அஷ்வினி இருவரும் படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

Recommended Video

Cook With Comali Ashwin Speech | Yaathi Yaathi Song | Tamil Filmibeat
ரொமான்டிக் போஸ்டர்

ரொமான்டிக் போஸ்டர்

இந்நிலையில்,என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில், மழையில் நனைந்தபடி முகத்தோடு முகத்தை உரசி ரொமான்டிக்கான போஸ்டர் வெளியாகியது. இந்த ஃபர்ஸ்ட் லுக்போஸ்டருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருன்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X